Ind vs Eng 5th Test: காயமடைந்த பட்டிதார்! அறிமுக வீரராக உள்ளே வந்திருக்கும் படிக்கல் - இங்கிலாந்து பேட்டிங்
Mar 07, 2024, 09:28 AM IST
Ind vs Eng 5th Test Toss: ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் ஒவ்வொரு வீரர்கள் அறிமுகமாகியுள்ளார்கள். இன்றைய போட்டியில் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் அறிமுக வீரராகள் களமிறங்குகிறார்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல பிரதேசம் மாநிலம் தரம்சாலாவில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிப்பதோடு டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியால் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
ஏற்கனவே டெஸ்ட் தொடரை வென்றுள்ளதால் இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இடது கை இளம் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் இன்றைய போட்டியில் அறிமுக வீரராக களமிறங்குகிறார். இந்திய அணியின் மூத்த வீரரான அஸ்வின், படிக்கலுக்கு டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை வழங்கினார்.
மற்றொரு இளம் வீரரான ராஜத் பட்டிதார் பயிற்சியில் ஈடுபட்டபோது இடது கை மணிக்கட்டில் காயமடைந்த நிலையில், அவருக்கு பதிலாக படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட ஜஸ்ப்ரீத் பும்ரா, இன்றைய போட்டியில் அணிக்கு திரும்பியுள்ளார்.
அதேபோல் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று 100வது போட்டியில் களமிறங்குகிறார். இந்த தொடரில் ஐந்து போட்டிகளிலும் ஒவ்வொரு வீரர்கள் அறிமுகமாகியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இப்படியொரு நிகழ்வு முதல் முறையாகவும், ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இரண்டாவது முறையாகவும் நிகழ்ந்துள்ளது.
பிட்ச் நிலவரம்
பிட்ச் பார்ப்பதற்கு ப்ரஷ் ஆக இருந்தாலும், வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து இங்கு விளையாடுவதால் எந்த பலனும் கிடைக்காது என இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் நைட் தெரிவித்துள்ளார்.
இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், தேவ்தத் படிக்கல், ரவீந்திர ஜடேஜா ஜடேஜா, ஷர்ப்ரஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா
இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), டாம் ஹார்ட்லி, மார்க் வுட், செளத் பஷிர், ஜேமி ஆண்டர்சன்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்