தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Cummins: தோற்றபின் பாகிஸ்தான் அணி சிறந்த அணி என்று கூறிய கோச் - கிண்டலடித்த ஆஸி.கேப்டன்

Cummins: தோற்றபின் பாகிஸ்தான் அணி சிறந்த அணி என்று கூறிய கோச் - கிண்டலடித்த ஆஸி.கேப்டன்

Marimuthu M HT Tamil

Dec 30, 2023, 02:15 PM IST

google News
ஆஸ்திரேலியாவை விட பாகிஸ்தான் 'சிறந்த கிரிக்கெட்டை' விளையாடியதாக கூறிய முகமது ஹஃபீஸுக்கு, ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் அற்புதமான பதிலை அளித்தார். (AP)
ஆஸ்திரேலியாவை விட பாகிஸ்தான் 'சிறந்த கிரிக்கெட்டை' விளையாடியதாக கூறிய முகமது ஹஃபீஸுக்கு, ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் அற்புதமான பதிலை அளித்தார்.

ஆஸ்திரேலியாவை விட பாகிஸ்தான் 'சிறந்த கிரிக்கெட்டை' விளையாடியதாக கூறிய முகமது ஹஃபீஸுக்கு, ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் அற்புதமான பதிலை அளித்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. 

போட்டி முழுவதும் ஆஸ்திரேலிய அணியுடன், பாகிஸ்தான் அணி கடுமையாகப் போராடியது. ஆனால், ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸின் அபார பந்துவீச்சில் மெல்போர்னில், அந்த ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

போட்டிக்குப் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான முகமது ஹஃபீஸ் ஒரு பரபரப்பான கருத்தை வெளியிட்டார். 

தனது அணி சில தவறுகளைச் செய்தது என்றும்; ஆனால், மெல்போர்னில் சிறந்த அணி என்றும் கூறினார். 

போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹஃபீஸ், "நாங்கள் ஒரு அணியாக சிறந்த கிரிக்கெட்டை விளையாடினோம். அதற்காக பெருமைப்படுகிறேன். இந்த ஆட்டத்தை மிகச்சிறந்த முறையில் தாக்கும் தைரியம் பாகிஸ்தான் அணிக்கு இருந்தது. நான் ஆட்டத்தை சுருக்கிப் பார்த்தால், பாகிஸ்தான் அணி பொதுவாக மற்ற அணியை விட சிறப்பாக விளையாடியது.

எங்கள் பேட்டிங் நோக்கம் சிறப்பாக இருந்தது. பந்துவீசும்போது, நாங்கள் சரியாகத்தான் செய்தோம். ஆமாம், நாங்கள் சில தவறுகளைச் செய்தோம். அதனால் நாங்கள் தோற்றோம். ஆனால் ஒரு அணியாக நிறைய நேர்மறைகள் இருந்தது விளையாட்டை வெல்ல போதுமானது என்று நான் நம்புகிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இறுதியில் நாங்கள் ஆட்டத்தை வெல்லவில்லை, "என்று அவர் மேலும் கூறினார்.

பின்னர், ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸிடம், பிந்தைய செய்தியாளர் சந்திப்பின் போது ஒரு நிருபர் ஹபீஸின் கருத்தை முன்னிறுத்தி அவரது கருத்தைக் கேட்டார். அப்போது,"அமைதி.. (சிரிக்கிறார்). ஆமாம், அவர்கள் நன்றாக விளையாடினார்கள். எங்களுக்கு வெற்றி கிடைத்ததில் மகிழ்ச்சி" என்று கம்மின்ஸ் கிண்டலடித்தார்.

இது குறித்து மீண்டும் நிருபர்கள் கேட்டபோது, "அது உண்மையில் ஒரு பொருட்டல்ல, இல்லையா? இறுதியில் அந்த அணிதான் வெல்லும்" என்றார்.

4-ம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் மீண்டும் களமிறங்கும் என்று தோன்றியது. ஆனால் உத்வேகமூட்டும் கம்மின்ஸ் கடைசி நாளில், பாகிஸ்தானின் நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மெல்போர்ன் டெஸ்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் டெஸ்ட் கேப்டன் கம்மின்ஸ் ஆனார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 216/5-லிருந்து 237 ரன்களுக்கு சுருண்டது. 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய கேப்டன்ஸ் கம்மின்ஸ் தனது பந்துவீச்சில், ஷான் மசூத்தின் அபார ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். 

கடைசி செஷனில் பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸி வேகப்பந்து வீச்சாளர்கள், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் நாதன் லயனின் பந்துவீச்சை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி