தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ashwin Record: இன்னும் 7 விக்கெட்டுகள் பாக்கி ! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அஸ்வின் செய்த தனித்துவ சாதனை

Ashwin Record: இன்னும் 7 விக்கெட்டுகள் பாக்கி ! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அஸ்வின் செய்த தனித்துவ சாதனை

Jan 26, 2024, 09:10 AM IST

google News
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கன்சிஸ்டன்டாக பவுலிங் செய்து வரும் ஸ்பின் பவுலராக இருந்து வருகிறார். அத்துடன் அஸ்வின் - ஜடேஜா கூட்டணி இந்திய ஆடுகளங்களில் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் தருபவர்களாகவே இருந்து வருகிறார்கள். (PTI)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கன்சிஸ்டன்டாக பவுலிங் செய்து வரும் ஸ்பின் பவுலராக இருந்து வருகிறார். அத்துடன் அஸ்வின் - ஜடேஜா கூட்டணி இந்திய ஆடுகளங்களில் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் தருபவர்களாகவே இருந்து வருகிறார்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கன்சிஸ்டன்டாக பவுலிங் செய்து வரும் ஸ்பின் பவுலராக இருந்து வருகிறார். அத்துடன் அஸ்வின் - ஜடேஜா கூட்டணி இந்திய ஆடுகளங்களில் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் தருபவர்களாகவே இருந்து வருகிறார்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2024-25 சுழற்சியில் மிகவும் முக்கியமான தொடராக இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்றும் வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இருந்து வருகிறது. இரு அணிகளுக்கும் இந்த தொடரின் முடிவுகள் புள்ளிப்பட்டியலில் டாப் இடத்தை பிடிக்க உதவும்.

இதையடுத்து இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஹைதராபாத்தில் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டி தொடங்கும் முன்னரே இந்திய அணியின் ஸ்பின் கூட்டணியான அஸ்வின் - ஜடேஜா நிகழ்த்தப்போகும் சாதனைகள் குறித்து பேச்சு எழுந்தது. அதன்படி தொடர் தொடங்குவதற்கு முன்னர் அஸ்வின் 490, ஜடேஜா 275 விக்கெட்டுகள் எடுத்திருக்கும் நிலையில் இந்த தொடரில் முறையே அவர்கள் 500, 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லலை எட்டுவார்கள் என பேசப்பட்டது.

அந்த வகையில் இந்த போட்டியின் முதல் நாளிலேயே இங்கிலாந்து 246 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல்அவுட்டானது. இதில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முன்னதாக, முதல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதே அஸ்வின், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனை புரிந்தார்.

இதைப் போல் அஸ்வின் - ஜடேஜா கூட்டணி 50 டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி தனித்துவ சாதனை புரிந்துள்ளது. இந்தியா பவுலிங் கூட்டணியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுலிங் ஜோடி என பெருமையை பெற்றுள்ளது. தற்போது இந்த பவுலிங் கூட்டணி இணைந்து 503 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது

இதற்கிடையே ஜடேஜா, "இந்த போட்டியிலேயே அஸ்வின் 500 விக்கெட் என்கிற சாதனையை புரிய வாய்ப்பு உள்ளதாக" தெரிவித்துள்ளார்.

இந்திய ஆடுகளங்களில் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் தரும் கூட்டணியாக இருந்து வரும் அஸ்வின் - ஜடேஜா கூட்டணி இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரில் அடுத்தடுத்து சாதனைகள் புரியும் என எதிர்பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி