Cricket : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பேச்சால் சர்ச்சை – உடனே பல்டியடித்து அறிக்கை
Sep 30, 2023, 08:34 AM IST
Cricket : பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரிய தலைவர் ஐகா அஷ்ரப். இவர் ஒரு பேட்டியில் இந்தியாவை எதிரி நாடு என்று குறிப்பிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரிய தலைவர் ஐகா அஷ்ரப். இவர் ஒரு பேட்டியில் இந்தியாவை எதிரி நாடு என்று குறிப்பிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவை அவர் எதிரி நாடு என குறிப்பிட்டு பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். உடனடியாக அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி, ‘இந்தியாவில் பாகிஸ்தான் அணியினருக்கு அளிக்கப்பட்ட அற்புதமான வரவேற்பு சிறப்பாக இருந்தது. இந்தியா-பாகிஸ்தான் அணியினர் களத்தில் மோதிக்கொள்ளும்போதெல்லாம், போட்டியாளர்களாக தங்களை வெளிப்படுத்துவார்களே தவிர எதிரிகளாக அல்ல என இந்திய வீரர்களை புகழ்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உலககோப்பை போட்டிகளில் நியுசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை பாகிஸ்தான் அணி இன்று ஹைதராபாத்தில் விளையாடுகிறது.
அவர்கள் அக்டோபர் 6ம் தேதி ஹைதராபாத்தில் நெதர்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை பிரச்சாரத்தை தொடங்குவார்கள்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், அந்த அணியின் தலைவர் பாபர் அசாம் தலைமையில் புதன்கிழமை இந்தியா வந்தனர். 7 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக இந்த அணியினிர் இந்தியா வந்துள்ளனர்.
முகமது நவாஸ் மற்றும் சல்மான் ஆகாவைத் தவிர பாகிஸ்தான் அணியில் பெரும்பாலானோர் முதல் முறையாக இந்தியா வந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.