இம்பேக்ட் வீரர் விதியை அதிரடியாக நீக்கிய பிசிசிஐ..பின்னணி காரணமாக இருந்த ரோஹித் ஷர்மா, கோலி - முழு விவரம்
Oct 15, 2024, 05:59 PM IST
டி20 போட்டிகளில் திருப்புமுனை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்த இம்பேக்ட் வீரர் விதியை அதிரடியாக நீக்கிய பிசிசிஐ அனைத்து மாநில கிரிக்கெட் அசோசியேஷன்களுக்கும் தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் வரும் 2027 வரை இம்பேக் வீரர் விதிமுறையானது தொடரும் என தெரிவித்துள்ளது.
கடந்த 2023 ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர் என்ற புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் வீரர்கள் போட்டி தொடங்கும் முன் தங்களது அணி விளையாடும் லெவனுடன் 5 வீரர்களை இம்பேக்ட் வீரர்களாக அறிவிக்கலாம். இதில் ஒருவர் போட்டியின்போது சூழ்நிலைக்கு ஏற்ப எந்த நேரத்திலும் களமிறக்கலாம். இந்த விதிமுறை போட்டியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்ற கூறலாம்.
வரப்பிரசாதமாக அமைந்த இம்பேக்ட் வீரர் விதிமுறை
குறிப்பாக சில அணிகளுக்கு இந்த விதிமுறை வரப்பிரசதமாகவே அமைந்தது. அத்துடன் சில அணிகள் இந்த விதிமுறையை லாவகமாக பயன்படுத்தி தங்களது அணிக்கு சாதமான சூழ்நிலையை மாற்றியும் கொண்டது. அவ்வாறு செய்த அணிகளில் ஒன்றாக சிஎஸ்கே இருந்தது.
2023 சீசனில் ராயுடுவை இம்பேக்ட் வீரராக பேட்டிங் மட்டும் ஆடவிட்டு பின்னர் பவுலிங்குக்கு மாற்று வீரரை பயன்படுத்தியது. இதை அப்படியே அடுத்த சீசனிலும் ஷிவம் துபேவை வைத்து செய்தது.
ஐபிஎல் போட்டிகளில் இந்த விதிமுறை வரவேற்பை பெற்ற நிலையில் பிசிசிஐயின் பிற உள்ளூர் கிரிக்கெட் போட்டியிலும் இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விதியுடனே போட்டிகளும் நடந்து வருகிறது.
இம்பேக்ட் வீரர் விதிமுறை நீக்கம்
இதையடுத்து இம்பேக்ட் வீரர் விதிமுறையை எதிர்வரும் சையத் முஸ்தாக் அலி டி20 கோப்பை தொடரில் நீக்குவதாக பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில கிரிக்கெட் அசோசியேஷனுக்கும் தகவல் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த விதிமுறையானது ஐபிஎல் தொடர்களில், அடுத்த மூன்று சீசன்களுக்கு அதாவது வரும் 2027 வரை தொடரும் என தெரிவித்துள்ளது.
ரோஹித், கோலி எதிர்ப்பு
இந்த விதிமுறை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டதில் இருந்தே, இந்திய கிரிக்கெட் வளர்ச்சிக்கு இந்த விதிமுறை நன்மை தராது என பல்வேறு கருத்துகளும், விமர்சனங்களும் எழுந்தன. இது ஆல்ரவுண்டர்களின் வளர்ச்சியை பாதிக்கலாம் எனவும் கூறப்பட்டது.
இந்திய டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மா, " இந்தி விதிமுறை இருந்தாலும் கிரிக்கெட் விளையாடுவது 12 வீரர்களால் அல்ல, 11 வீரர்கள் தான். நிச்சயமாக இது ஆல்ரவுண்டர்களின் வளர்ச்சியை பின்வாங்க வைக்கும்.
நான் இம்பாக்ட் பிளேயரின் பெரிய ரசிகன் அல்ல. சுற்றியிருப்பவர்களுக்கு சிறிய பொழுதுபோக்குக்காக விளையாட்டிலிருந்து நீங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்றார்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன், ஸ்டார் கேப்டன் விராட் கோலியும் இம்பேக்ட் வீரர் விதிமுறை பற்றி விமர்சித்துள்ளார். அந்த வகையில் இதற்கு செவி சாய்க்கும் விதமாக முதலில் இந்த விதியை சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் நீக்கியுள்ளது.
2025 ஐபிஎல் சீசனில் இந்த விதிமுறை தொடரும் எனவும், 2027 வரை இதில் மாற்றம் இருக்காது அல்லது வேறு ஏதும் சுவாரஸ்யமான மாற்றங்கள் கூட ஏற்படுத்தலாம்
டாபிக்ஸ்