Manish Pandey: மனீஷ் பாண்டே பவுலிங் செய்ய பிசிசிஐ தடை! மேலும் 7 பவுலர்களுக்கு செக்
Dec 16, 2023, 10:15 PM IST
பந்து வீசும் முறை விதிக்கு உட்பட்டு இல்லை எனக் கூற மனீஷ் பாண்டே உள்பட இன்னொரு வீரருக்கு பந்து வீச பிசிசிஐ தடை விதித்துள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களிடம் இருக்கும் குறைபாடுகளை கண்டறிந்த அவற்றை சரி செய்யும் முயற்சியில் பிசிசிஐ களமிறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பேட்ஸ்மேன், பவுலர்கள் விளையாடும் திறனை கண்காணித்து வருகிறது. இதில் குறிப்பாக சில வீரர்களின் பந்து வீசும் முறை ஆட்சோபனைக்கு உரியாதாகவும், முறையற்றதாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த வீரர்கள் விளையாடும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு இது குறித்த அறிவுறுத்தல்களையும் பிசிசிஐ வழங்கியுள்ளது.
இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரரும் இந்த லிஸ்டில் இடம்பிடித்திருப்பது பலருக்கு ஆச்சர்யத்தை கிளப்பியுள்ளது. இந்தியாவுக்காக ஒரு நாள், டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் 25 வயதாகும் செளராஷ்ட்ரா அணியை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான சேட்டன் சக்காரியா பந்து வீச்சு சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இவர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்த நிலையில், சமீபத்தில் விடுவிக்கப்பபட்டார்.
இவருடன் மும்பை அணியை சேர்ந்து தனுஷ் கோட்டியன், கேரளா அணியை சேர்ந்த ரோகன் குன்னும்மாள், சல்மான் நிசார், விதர்பா அணியை சேர்ந்த செளரப் துபே, இமாச்சல் பிரதேசம் அணியை சேர்ந்த அர்பித் குலேரியா ஆகியோரும் இந்த லிஸ்டில் உள்ளார்கள்.
அத்துடன் கர்நாடக அணியில் விளையாடி வரும் மனிஷ் பாண்டே, ஸ்ரீஜித் ஆகியோரின் பந்து வீச்சு முறையும் விதிக்கு உட்பட்டதாக இல்லை என கூறி இவர்கள் பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்