HT Cricket Special: 9 ஆண்டுகள் ஆகியும் மறக்க முடியாத வலி! மறைந்த ஆஸ்திரேலியா வீரர் பிலிப் ஹூயூக்ஸ் நினைவு நாள் இன்று
Nov 27, 2023, 06:18 AM IST
பிலிப் ஹூயூக்ஸ் கடைசியாக அடித்த 63 ரன்கள் நாட்அவுட்டை நினைவுபடுத்தும் விதமாக 63 எண் ஜெர்சி அவரது பெயரிலேயே நிரந்தரமாக்கப்பட்டது. இன்று வரையிலும் அவரது இறப்பின் தாக்கம் ஆஸ்திரேலியா வீரர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் பிஎச் என்ற கருப்பு பட்டை அணிந்து முக்கிய போட்டிகளில் களமிறங்குகிறார்கள்.
நவம்பர் 27ஆம் தேதியான இந்த நாள் கிரிக்கெட் விளையாட்டில் மறக்க முடியாத சோக சம்பவம் நிகழ்ந்த நாளாக உள்ளது. ஆஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட், ஒரு நாள், டி20 போட்டிகளில் விளையாடி வந்த இளம் பேட்ஸ்மேனும், வளர்ந்து வரும் வீரராகவும் இருந்த பிலிப் ஹூயூக்ஸ், மைதானத்தில் பேட் செய்தபோது பவுன்சர் பந்து தலையில் தாக்கி சிகிச்சை பலனின்றி இதே நாளில் உயிரழந்தார். இவரது இறப்பு ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஹூயூக்ஸ் இறக்கும்போது அவரது வயது 25 ஆகும். சரியாக தனது 26வது பிறந்தநாளுக்கு மூன்று நாள்கள் முன்பு தனது வாழ்நாளை முடித்துக்கொள்ளும் விதமாக இப்படியொரு நிகழ்வு நடந்துள்ளது.
ஆஸ்திரேலியா உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹூயூக்ஸ்க்கு, 2009இல் தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. 20 வயதாகியிருந்த இடது கை பேட்ஸ்மேனான இவர் சர்வதேச போட்டியிலும் தனது கிளாஸ் பேட்டிங் செய்தால் அனைவரையும் கவர்ந்தார். அறிமுகமான டெஸ்ட் தொடரிலேயே தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக சதமடித்து, ஆஸ்திரேலியாவுக்கு சதமடித்த இளம் வீரர் என்ற சாதனை புரிந்தார். அந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து சாதித்தார். அதுவும் அவர் இதனை சாதித்தது அந்நிய மண்ணில் என்பது பலரது புருவங்களையும் மேலும் உயர வைத்தது.
அதேபோல் 2013இல் ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார் ஹூயூக்ஸ். முதல் போட்டியிலேயே சதமடித்து, ஆஸ்திரேலியாவுக்காக அறிமுக ஆட்டத்தில் சதமடித்த பேட்ஸ்மேன் என மற்றொரு சாதனையும் புரிந்தார்.
டெஸ்ட் 25, ஒரு நாள் 26 என குறைவான போட்டிகளிலேயே விளைாடியிருந்தாலும் நிறைவான இன்னிங்ஸை வெளிப்படுத்திய ஹூயூக்ஸ், தனது கிளாஸ் ஆட்டத்தால் கவர்ந்தார். 2014ஆம் ஆண்டில் தான் அவரது வாழ்நாளை முடித்து கொள்ள காரணமாக இருந்த அந்த சம்பவம் நிகழ்ந்தது.
சிட்னியில் நடைபெற்ற ஷெஃபீல்ட் ஷீல்ட் கோப்பைக்கான போட்டியில், தற்போது ஆஸ்திரேலியா அணியில் விளையாடி வரும் சீன் அபாட் பந்தை கூக் ஷாட் மூலம் ஆட முயற்சித்தார் ஹூயூக்ஸ். அந்த பந்து மிஸ் ஹிட்டாகி ஹெல்மெட்டின் பின்பகுதியில் தலைக்கும், ஹெல்மெட்டுக்கும் இடையே தாக்கியது. அடிபட்ட பின் சில விநாடிகள் குணிந்து நின்ற ஹூயூக்ஸ் அப்படியே கிறங்கியாவாறு கீழே விழுந்தது காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
உடனடியாக அவர் அங்கிருந்து மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். முதுகெலும்பு தமனி சிதைவு, இரத்தப்போக்குக்கு வழிவகுத்தது. ஆபத்தான நிலையில் ஐசியூவில் ஹூயூக்ஸ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. செயற்கையான முறையில் கோமா நிலைக்கு சென்ற அவர் பின்னர் சுயநினைவு பெறாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிரிக்கெட் பந்து பட்டதால் இவரது இறந்த போன சம்பவம் ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன் பின்னர் ஹூயூக்ஸின் இறுதி சடங்குகள் டிசம்பர் 3ஆம் தேதி நடந்தது. இதில் ஒட்டு மொத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட்டினர், அந்நாட்டு பிரதமர் பங்கேற்றனர்.
ஹூயூக்ஸ் இறப்பதற்கு முன்பு விளையாடிய இன்னிங்ஸில் 63 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். இதையடுத்து ஹூயூக்ஸ் நினைவாக 63 என்ற ஜெர்சி எண் அவருக்கு நிரந்தரமாக வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் ஹூயூக்ஸ் நினைவு நாளில் ஆஸ்திரேலியா வீரர்கள் தவறாமல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறப்புக்கு கெளரவம் அளிக்கும் விதமாக பிஎச் என அச்சிடப்பட்ட கருப்பு பட்டை அணிந்து முக்கிய போட்டிகளில் களமிறங்கி வருகிறார்கள்.
கடந்த வாரம் நடைபெற்ற உலகக் கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் கூட பிஎச் கருப்பு பட்டை அணிந்தே ஆஸ்திரேலியா வீரர்கள் விளையாடினர். ஹூயூக்ஸ் இறப்பின் தாக்கம் 9 ஆண்டுகள் ஆகியும் ஆஸ்திரேலியா வீரர்களிடம் நீங்காமல் இருந்து வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்