தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind W Vs Aus W: இந்திய மகளிர் ஆறுதல் வெற்றி பெற இமாலய இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா மகளிர்

IND W vs AUS W: இந்திய மகளிர் ஆறுதல் வெற்றி பெற இமாலய இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா மகளிர்

Jan 02, 2024, 05:34 PM IST

google News
முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் தோல்வி அடைந்து இந்திய மகளிர் தொடரை இழந்த போதிலும், இன்று ஆறுதல் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இமாலய இலக்கை ஆஸ்திரேலியா மகளிர் நிர்ணயித்துள்ளது.

இந்தியா மகளிர் - ஆஸ்திரேலியா மகளிர் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மகளிர் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருக்கும் நிலையில், மூன்றாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய மகளிர் பவுலிங்கை பிரித்தெடுத்த ஆஸ்திரேலியா மகளிர் பேட்டர்கள் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா மகளிர் ஒபனிங் பேட்டர் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் சதமடித்து 119 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக மற்றொரு ஒபனிங் பேட்டரும், அணியின் கேப்டனுமான அலிசா ஹீலி 82 ரன்கள் அடித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்தனர்.

இந்திய மகளிர் பவுலர்களில் ஷ்ரேயங்கா பாடீல் 3, அமன்ஜோத் கெளர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஏற்கனவே தொடரை இழந்த இந்திய மகளிர் இன்று ஆறுதல் வெற்றி பெறுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா மகளிர் இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.

ஒரு நாள் தொடரை முழுமையாக இழப்பதை தவிர்க்க இந்திய மகளிர் 339 ரன்களை சேஸ் செய்ய வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி