தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Aus Vs Pak: ‘இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல’-சதத்தை தவறவிட்ட ரிஸ்வான்.. பாக்.,-ஆஸி., ஸ்கோர் அப்டேட்

Aus vs Pak: ‘இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல’-சதத்தை தவறவிட்ட ரிஸ்வான்.. பாக்.,-ஆஸி., ஸ்கோர் அப்டேட்

Manigandan K T HT Tamil

Jan 03, 2024, 09:54 AM IST

google News
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. (AP)
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.

Australia vs Pakistan, 3rd Test Live: ஆஸி.,க்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. இன்று சிட்னியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

களமிறங்கிய அப்துல்லா ஷஃபிக், சயின் அயூப் ஆகியோர் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

பாக்., கிரிக்கெட் ரசிகர்கள் இப்படி ஆகும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பின்னர் கேப்டன் ஷார் மசூத், முன்னாள் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் நிதானமாக விளையாடி அணியை ஸ்கோரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி வந்தனர்.

எனினும், அவர்களது கூட்டணியை பாட் கம்மின்ஸ் தனது அபார பந்துவீச்சால் பிரித்தார். பாபர் 26 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சவுத் ஷகீல் 5 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் ஷான் மசூத்தும் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 96 ரன்களை எடுத்து இருந்தது. பின்னர் முகமது ரிஸ்வான் நிதானமாக விளையாடி அரை சதம் கடந்தார். மறுமுனையில் அவருக்கு அகா சல்மான் தோள் கொடுத்தார். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 88 ரன்கள் எடுத்திருந்தபோது கம்மின்ஸ் பந்துவீச்சில் ஹேஸில்வுட்டிடம் கேட்ச் ஆனார் ரிஸ்வான்.

சஜித் கான், அகா சல்மான் விளையாடி வருகின்றனர். தேநீர் இடைவேளை வரை பாட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சுருட்டினார். மிட்செல் மார்ஷ், ஹேஸில்வுட், ஸ்டார்க் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இது எஸ்.சி.ஜி மைதானத்தில் நடைபெறும் 112-வது டெஸ்ட் போட்டியாகவும், ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னருக்கு 112-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியாகவும் இருக்கும்.

பாகிஸ்தான் இரண்டு மாற்றங்களைச் செய்தது. இமாம்-உல்-ஹக்கிற்கு பதிலாக இன்னிங்ஸைத் தொடங்கும் சைம் அயூப்பிற்கு ஒரு டெஸ்ட் அறிமுகமும், வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஆஃப் ஸ்பின்னர் சஜித் கானுக்கு வழிவிடப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் டெஸ்டையும் ஆஸி., வென்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது. 3வது டெஸ்டில் பாகிஸ்தான் ஜெயித்தால் அது அந்த அணிக்கு ஆறுதல் வெற்றியாக அமையும்.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்

பாகிஸ்தான்: சைம் அயூப், அப்துல்லா ஷபீக், ஷான் மசூத் (கேப்டன்), பாபர் அசாம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், சாஜித் கான், ஹசன் அலி, மிர் ஹம்சா, அமீர் ஜமால்

.

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை