தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Australia Vs Pakistan 2nd Test: பாக்ஸிங் டே டெஸ்டில் பாக்., தோல்வி: தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா!

Australia vs Pakistan 2nd Test: பாக்ஸிங் டே டெஸ்டில் பாக்., தோல்வி: தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா!

Manigandan K T HT Tamil

Dec 29, 2023, 02:41 PM IST

google News
2வது டெஸ்டில் ஆஸி., கேப்டன் பேட் கம்மின்ஸ் மொத்தம் 10 விக்கெட்டுகளை சுருட்டினார். (AFP)
2வது டெஸ்டில் ஆஸி., கேப்டன் பேட் கம்மின்ஸ் மொத்தம் 10 விக்கெட்டுகளை சுருட்டினார்.

2வது டெஸ்டில் ஆஸி., கேப்டன் பேட் கம்மின்ஸ் மொத்தம் 10 விக்கெட்டுகளை சுருட்டினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மெல்போர்னில் கடந்த 26ம் தேதி தொடங்கியது பாக்ஸிங் டே டெஸ்டான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது.

இதையடுத்து, முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 318 ரன்களை ஆஸ்திரேலியா குவித்தது.

பின்னர், விளையாடிய பாகிஸ்தான் 264 ரன்களில் சுருண்டது. 54 ரன்கள் முன்னிலையில் ஆஸி., 2வது இன்னிங்ஸை விளையாடியது. அந்த அணி 84.1 ஓவர்களில் 262 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர், 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் 2வது இன்னிங்ஸை தொடங்கியது.

ஆனால், அந்த அணியால் கடைசி நாளான இன்று 237 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அகா சல்மான்,கேப்டன் ஷான் மசூத் ஆகியோர் அரை சதம் பதிவு செய்தனர்.மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும் 2வது இன்னிங்ஸில் விழ்த்தினார். முதல் இன்னிங்ஸிலும் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை காலி செய்தது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்டிலும் ஆஸி., அணி ஜெயித்தது. 2வது டெஸ்டிலும் ஆஸி., ஜெயித்து தொடரைக் கைப்பற்றியது. பிளேயர் ஆஃப் தி மேட்ச் பேட் கம்மின்ஸுக்கு வழங்கப்பட்டது. இரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் ஜன. 3ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

 

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி