தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Aus 1st T20: இங்கிலீல் சதம்! இந்திய பவுலர்களை பொளந்து கட்டிய ஆஸ்திரேலியா - 208 ரன்கள் குவிப்பு

IND vs AUS 1st T20: இங்கிலீல் சதம்! இந்திய பவுலர்களை பொளந்து கட்டிய ஆஸ்திரேலியா - 208 ரன்கள் குவிப்பு

Nov 23, 2023, 08:51 PM IST

google News
டாப் ஆர்டரில் களமிறங்கிய இங்கிலீஸ், இந்திய பவுலர்களுக்கு எதிராக தொடக்கம் முதலே பவுண்டரி, சிக்ஸர்கள் என அதிரடி காட்டி சதமடித்தார். அவருடன் ஸ்மித்தும் இணைந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து அரைசதமடித்தார். கைமேல் கிடைத்த நல்ல கேட்ச் வாய்ப்புகளை இந்திய பீல்டர்கள் கோட்டை விட்டனர். (AFP)
டாப் ஆர்டரில் களமிறங்கிய இங்கிலீஸ், இந்திய பவுலர்களுக்கு எதிராக தொடக்கம் முதலே பவுண்டரி, சிக்ஸர்கள் என அதிரடி காட்டி சதமடித்தார். அவருடன் ஸ்மித்தும் இணைந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து அரைசதமடித்தார். கைமேல் கிடைத்த நல்ல கேட்ச் வாய்ப்புகளை இந்திய பீல்டர்கள் கோட்டை விட்டனர்.

டாப் ஆர்டரில் களமிறங்கிய இங்கிலீஸ், இந்திய பவுலர்களுக்கு எதிராக தொடக்கம் முதலே பவுண்டரி, சிக்ஸர்கள் என அதிரடி காட்டி சதமடித்தார். அவருடன் ஸ்மித்தும் இணைந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து அரைசதமடித்தார். கைமேல் கிடைத்த நல்ல கேட்ச் வாய்ப்புகளை இந்திய பீல்டர்கள் கோட்டை விட்டனர்.

உலகக் கோப்பை 2023 தொடர் முடிந்திருக்கும் நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கியுள்ளது. முதல் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகபட்டினத்தில் உள்ள ஒய்எஸ் ராஜசேகரரெட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா உள்பட உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதேபோல் ஆஸ்திரேலியா அணியிலும் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையிலும், ஆஸ்திரேலியா அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் தலைமையிலும் களமிறங்கியுள்ளது. இதையடுத்து டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணியில் மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் பேட்டிங் செய்ய களமிறங்கியது முதல் பவுண்டரி, சிக்ஸர்கள் என அதிரடி காட்டினார். 47 பந்துகளில் அவர் தனது சதத்தை பூர்த்தி செய்தார். 11 பவுண்டரி, 8 சிக்ஸர்களை அடித்த இங்கலீஸ் 50 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இவருடன் இணைந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்டீவ் ஸ்மித் அரைசதமடித்து 41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஸ்மித் - இங்கிலிஸ் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இந்திய பவுலர்களில் பந்து வீசிய 4 ஓவர்களில் பிரசித் கிருஷ்ணா 50, ரவி பிஷ்னோய் 54 ரன்களை வாரி வழங்கியபோதிலும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். இந்திய அணியின் பீல்டிங் இன்று மிகவும் மோசமாக அமைந்தது. கைக்கு வந்த பல் கேட்ச்களை பிடிக்காமல் தவறவிட்டதன் விளைவாக ஆஸ்திரேலியா மிக பெரிய இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்துள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை