தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Hbd Mitchell Starc: மின்னல் வேக பந்து வீச்சாளர்! பவுலிங்கில் விக்கெட் மெஷினாக இருந்து வரும் ஸ்டார்க்

HBD Mitchell Starc: மின்னல் வேக பந்து வீச்சாளர்! பவுலிங்கில் விக்கெட் மெஷினாக இருந்து வரும் ஸ்டார்க்

Jan 30, 2024, 07:15 AM IST

google News
மின்னல் வேகப்பந்து வீச்சாளராக பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் பவுலராக, உலகக் கோப்பை போட்டிகளின் நாயகனாகவும் இருந்து வருகிறார். அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்தியது, அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற வீரர்களில் ஒருவர் என பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார்.
மின்னல் வேகப்பந்து வீச்சாளராக பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் பவுலராக, உலகக் கோப்பை போட்டிகளின் நாயகனாகவும் இருந்து வருகிறார். அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்தியது, அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற வீரர்களில் ஒருவர் என பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார்.

மின்னல் வேகப்பந்து வீச்சாளராக பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் பவுலராக, உலகக் கோப்பை போட்டிகளின் நாயகனாகவும் இருந்து வருகிறார். அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்தியது, அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற வீரர்களில் ஒருவர் என பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணியில் டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் விளையாடி வருபவர் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். 2010இல் இருந்து இவர் சர்வதேச கிரிக்கெட் விளையாடி வந்தாலும், 2015 உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

மின்னல் வேகத்தில் பந்து வீசக்கூடிய இவரது பந்து அதிகபட்சமாக மணிக்கு 160.4 கிமீ வேகத்தில் இருந்துள்ளது. இடது கை பந்து வீச்சாளரான் ஸ்டார்க் இதே வேகத்தில் ரிவர்ஸ் ஸ்விங்கும் செய்து பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலை தரக்கூடிய பவுலராக இருந்துள்ளார். உலகக் கோப்பை நாயகன் என்றே அழைக்கப்படும் ஸ்டார்க் 2019 உலகக் கோப்பை தொடரில் 10 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவே ஒரு உலகக் கோப்பை தொடரில் பவுலர் ஒருவர் எடுத்த அதிக விக்கெட்டுகளாக உள்ளது. அந்த வகையில் பேட்டிங்கில் எப்படி விராட் கோலியை ரன் மெஷின் என்று அழைக்கிறோமோ, அதுபோல் பவுலிங்கில் இவர் விக்கெட் எடுக்கும் மெஷினாகவும் செயல்பட்டுள்ளார்.

அதிகவேகமாக 150, 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனை ஸ்டார்க் வசம் உள்ளது. அத்துடன் ஒரு நாள், டி20, டெஸ்ட் என மூன்று வகை ஐசிசி கோப்பைகளையும் வென்றிருக்கும் 5 வீரர்களில் ஒருவராக உள்ளார்.

வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சிறந்த பவுலர் என பெயரெடுத்திருக்கும் ஸ்டார்க், உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களில் மூன்றாவது இடத்தில் உள்ளார். உலகக் கோப்பை தொடரில் 19 போட்டிகளிலேயே 50 விக்கெட்டுகளை வீழ்த்தி தனித்துவமான சாதனை புரிந்துள்ளார்.

2021ஆம் டி20 உலக்க கோப்பை தொடர், 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற ஆஸ்திரேலியா அணியில் அங்கம் வகித்த வீரராக இருந்து வருகிறார். கடந்த ஆண்டில் இந்தியாவில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் 10 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஸ்டார்க்.

கிரிக்கெட் விளையாடிய ஆரம்ப காலகட்டத்தில் அடிக்கடி காயம் ஏற்பட்டு அணியில் இடம்பெறுவதும், போவதுமாக இருந்தார். தற்போது அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக 2014, 2015 சீசன்களில் விளையாடியிருக்கும் ஸ்டார்க், இந்த ஆண்டுக்கான சீசனில் 9 ஆண்டுகள் கழித்து கம்பேக் கொடுக்கிறார். இந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

ஸ்டார்க் காதல் மனைவியான அலிசா ஹீலி, ஆஸ்திரேலியா மகளிர் அணி வீராங்கனையாகவும், கேப்டனாகவும் உள்ளார். கிரிக்கெட் விளையாட்டு ஜோடியாக இவர் வலம் வருகிறார்கள். ஆஸ்திரேலியா அணி பவுலிங்கில் பவர்புஃல் மேனாக இருந்து வரும் மிட்செல் ஸ்டார்க் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி