AUS vs WI: முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அறிமுக பவுலர்! 85 ஆண்டுக்கு பின் நிகழ்த்தப்பட்ட சாதனை
Jan 18, 2024, 03:25 PM IST
அறிமுக வீரராக களமிறங்கி தான் வீசிய முதல் பந்திலேயே முன்னணி பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை தூக்கி கவனத்தை ஈர்த்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்தது. அனுபவம் இல்லாத வீரர்களுடன் இந்த தொடரில் களமிறங்கியிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 188 ரன்களில் ஆல்அட்டானது. ஆஸ்திரேலியா பவுலர்களில் ஹசில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலியா தொடர்ந்தது. இதில் ஆட்டத்தின் 8வது ஓவர் முதல் பந்தை வெஸ்ட் இண்டீஸ் அணியின் அறிமுக வீரர் ஷமர் ஜோசப் வீசினார். அப்போது 12 ரன்களுடன் ஸ்டிரைக்கில் இருந்த ஓபனிங் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை தூக்கினார்.
இதன் மூலம் அறிமுக போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய 23வது பவுலர் என்ற பெருமையை பெற்றார் ஷமர் ஜோசப். ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஸ்கோர் குவிக்க விடமாக கட்டுப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள், முதல் இன்னிங்ஸில் 283 ரன்களில் ஆல்அவுட் செய்தனர். அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமர் ஜோசப் மற்றொரு சாதனையும் புரிந்தார்.
அத்துடன், கடந்த 1939ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டைலர் ஜான்சன் என்பவர் தன்னுடைய முதல் பந்திலே டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் பின்னர் 85 ஆண்டு காலத்துக்கு பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய பவுலராகியுள்ளார் ஷமர் ஜோசப்.
இதையடுத்து 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்துள்ளது. தற்போதைய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 22 ரன்கள் ஆஸ்திரேலியாவை விட பின் தங்கியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்