Asian Games 2023 semifinal: வங்கதேசத்தை வீழ்த்தி ஃபைனலில் இந்தியா
Sep 24, 2023, 11:09 AM IST
ஆசிய மகளிர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
சீனாவில் ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வங்கதேச அணிக்கு எதிராக, இந்தியா மோதிய அரையிறுதி ஆட்டமானது முதலில் இன்று காலை 6:30 மணிக்குத் தொடங்கியது. முதலில் ஆடிய வங்கதேச அணி 17.5 ஓவரில் 51 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து சுருண்டது.
குறிப்பாக வங்கதேச அணியின் கேப்டன் நிகர் சுல்தானா அதிகபட்சமாக 12 ரன்களை எடுத்தார். வங்கதேசத்துக்கு எதிராக 4 விக்கெட்களை இந்திய பந்துவீச்சு வீராங்கனை பூஜா வஸ்த்ரகர் எடுத்தார். அதனைத்தொடர்ந்து எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8.2 ஓவரில் இரண்டு விக்கெட்களை இழந்து, 52 ரன்களை எடுத்தது. முன்னதாக, மகளிர் கிரிக்கெட் போட்டியின், கேப்டன் ஸிமிருதி மந்தனா 7 ரன்களையும், ஷபாலி வர்மா 17 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஜெமிகா, கனகா ஆகியோர் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்
டாபிக்ஸ்