Asia Cup 2023: ஆசிய கோப்பை பைனல் போட்டியைக் கண்டு ரசித்த பிரபுதேவா!
Sep 17, 2023, 05:08 PM IST
இலங்கை அணி 14 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா-இலங்கை இடையிலான ஆசிய கோப்பை 2023 பைனல் போட்டியை நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா கண்டு ரசித்தார்.
இவர், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ செயலருமான ஜெய் ஷாவுக்கு அருகில் அமர்ந்து போட்டியைக் கண்டு ரசித்தார்.
இவரது பாடல்களும் மைதான அரங்கில் ஒலிக்கவிடப்பட்டது.
கோலியும் பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி கொண்டாட்டத்துடன் ஃபீல்டிங் செய்து வருகிறார்.
இந்தப் போட்டி இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 250வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியாகும். பல வெற்றிகளை அணிக்கு தேடித்தந்த கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அந்த வகையில் இன்றைய ஆட்டம் ஸ்பெஷல் டே ஆகும். இன்றைய போட்டியிலும் ஜெயித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினால், ரோகித் சர்மாவுக்கு இந்த நாள் மறக்க முடியாததாக மாறும்.
இந்தியா, இலங்கை இடையேயான பைனல் போட்டிக்கு 2.30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸில் ஜெயித்த இலங்கை, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா ஃபீல்டிங் செய்து வருகிறது.
முந்தைய வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் சேஸிங்கில் இந்தியா தோற்றது நினைவுகூரத்தக்கது. அதை இன்று மாற்றும் என எதிர்பார்க்கலாம். மழை பெய்ய வாய்ப்பிருப்பதால், முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாககக் கூறப்பட்டது. ஆனால், இலங்கை விளையாடி வரும் நிலையைப் பார்த்தால், இந்தியா நிச்சயம் வெற்றி பெற்றும் எட்டாவது முறையாக ஆசிய கோப்பையை கையில் ஏந்தும் என நம்பலாம். கிரிக்கெட்டில் எதுவேண்டுமானாலும் நடக்காலம் என்பதற்கு இதுவே உதாரணம்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்