தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Asia Cup 2023: இருபது ஆண்டு கால காத்திருப்பு! சாதிப்பாரா பாபர் அசாம்? வங்கதேசம் முதல் பேட்டிங்

Asia Cup 2023: இருபது ஆண்டு கால காத்திருப்பு! சாதிப்பாரா பாபர் அசாம்? வங்கதேசம் முதல் பேட்டிங்

Sep 06, 2023, 02:42 PM IST

google News
Pak vs Ban Live Score: பாகிஸ்தானில் நடைபெறும் கடைசி போட்டியாக இன்றைய ஆட்டம் இருக்கும் நிலையில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
Pak vs Ban Live Score: பாகிஸ்தானில் நடைபெறும் கடைசி போட்டியாக இன்றைய ஆட்டம் இருக்கும் நிலையில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Pak vs Ban Live Score: பாகிஸ்தானில் நடைபெறும் கடைசி போட்டியாக இன்றைய ஆட்டம் இருக்கும் நிலையில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை 2023 தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், சூப்பர் 4 சுற்று போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இதையடுத்து சூப்பர் 4 சுற்று முதல் போட்டி பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையே லாகூரில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் கடைசி போட்டியாக இது உள்ளது.

இதையடுத்து இதில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த தொடரில் இதுவரை பாகிஸ்தான் அணி பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. லீக் சுற்றில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் எதிரணியை முழுமையாக 50 ஓவர் விளையாடவிடாமல் ஆல்அவுட் ஆக்கியுள்ளது. அத்துடன் பாபர் அசாம் இந்த போட்டியில் சதமடித்தால், அதிக சதமடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை சமன் செய்யலாம்.

இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணி ஓபனிங் பேட்ஸ்மேன் 2003 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக தனது 20வது சதத்தை பதிவு செய்தார். இதுவே பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சர்வதேச அளவில் அடித்த அதிகபட்ச ஸ்கோராக 20 ஆண்டு காலம் வரை உள்ளது. இதை இன்று பாபர் அசாம் முறியடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. cricket news in tamil, Asia cup 2023, Asia cup Super 4 match, Pak vs Ban Live Score, Bangladesh batting first, Babar Azam, கிரிக்கெட் செய்திகள், ஆசிய கோப்பை 2023, ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டி, பாகிஸ்தான் vs வங்கதேசம நேரலை, வங்கதேசம் முதல் பேட்டிங், பாபர் அசாம்

வங்கதேச அணியில் பார்மில் இருக்கும் பேட்ஸ்மேன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ திடீரென தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து விலகி இருப்பது அணிக்கு பின்னடைவே ஏற்பட்டுள்ளது. இவர்தான் தற்போது ஆசிய கோப்பை தொடரில் 193 ரன்கள் எடுத்து டாப் ஸ்கோரராக உள்ளார். இலங்கை அணிக்கு எதிராக பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் ஜொலிக்காத வங்கதேசம், அடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பேட்டிங்கில் சாதித்தது. பவுலிங்கில் பெரிய அளவில் முன்னேற்றம் பெறவில்லை.

சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணிகளும் மூன்று போட்டிகள் விளையாடும். இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அதன்படி முதல் போட்டியில் வெற்றி பெற்று நெருக்கடியை குறைக்க இரு அணிகளும் முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி