தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Arjuna Ranatunga: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்! எலும்பும் தோலுமாக மாறிய உலகக் கோப்பை வென்ற கேப்டன்

Arjuna Ranatunga: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்! எலும்பும் தோலுமாக மாறிய உலகக் கோப்பை வென்ற கேப்டன்

Jul 18, 2024, 05:19 PM IST

google News
இலங்கை அணிக்கு முதல் உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்குரியவரான அர்ஜுனா ரணதுங்கா, கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தில் தனது குண்டான உருவ அமைப்புக்கு பெயர் போனவராக இருந்துள்ளார். தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவில் எலும்பும் தோலுமாக மாறியுள்ளார்.
இலங்கை அணிக்கு முதல் உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்குரியவரான அர்ஜுனா ரணதுங்கா, கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தில் தனது குண்டான உருவ அமைப்புக்கு பெயர் போனவராக இருந்துள்ளார். தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவில் எலும்பும் தோலுமாக மாறியுள்ளார்.

இலங்கை அணிக்கு முதல் உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்குரியவரான அர்ஜுனா ரணதுங்கா, கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தில் தனது குண்டான உருவ அமைப்புக்கு பெயர் போனவராக இருந்துள்ளார். தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவில் எலும்பும் தோலுமாக மாறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் அர்ஜுனா ரணதுங்கா. 60 வயதாகும் ரணதுங்கா, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஆகியோர் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

முன்னாள் கேப்டன்களின் புகைப்படம் தானே என்று இல்லாமல் கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தில் கொழு கொழு என தனது குண்டான உருவ அமைப்புக்கு பெயர் போன ரணதுங்கா, தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவில் எலும்பும் தோலுமாக மாறியிருப்பது தான் இந்த போட்டோ வைரல் ஆவதற்கு காரணமாக இருந்துள்ளது. இவரது இந்த புதிய தோற்றம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. 

ஸ்லிம் லுக்கில் ரணதுங்கா

இலங்கை அணிக்காக தான் விளையாடியபோது இருந்த உருவத்துக்கு நேர் எதிராக ஸ்லிம் ஆக மாறியிருக்கிறார் ரணதுங்கா. ஏற்கனவே, கடந்த ஆண்டில், ஆசியக் கோப்பையின் போது, முழு கலப்பின மாடல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதும், இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளைத் தவிர போட்டிகளுக்கு ரிசர்வ் நாள்கள் இல்லாதது குறித்து பேசும்போது ரணதுங்கா சற்று ஒல்லியாகவே காணப்பட்டார். அத்துடன் அவரது பேச்சிலும், முகத்திலும் பெரிதாக உணர்ச்சிகள் இல்லாமல் இருந்தது.

இந்த சூழ்நிலையில் அர்ஜுனா ரணதுங்காவின் இந்த திடீர் உடல்நிலை மாற்றம் குறித்து பல்வேறு பேச்சுகளும் எழுந்துள்ளன. அவருக்கு ஏதேனும் நோய் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பால் இவ்வாறு எடை இழப்பு நிகழ்ந்து இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது.

இலங்கை அணிக்கு உலகக் கோப்பை வென்ற கேப்டன்

இலங்கை அணிக்காக 1982 முதல் 2000 வரை என 18 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடினார் அர்ஜுனா ரணதுங்கா. 1996இல் இலங்கை அணி முதல் முறையாக உலகக் கோப்பை வென்று சாதித்தது. அந்த அணியின் கேப்டனாக இருந்தவர் அர்ஜுனா ரணதுங்கா தான்.

தனது 18 வயதிலேயே இலங்கை அணிக்காக களமிறங்கிய, அணியின் முக்கிய வீரராகவே வலம் வந்துள்ளார். இலங்கை அணிக்காக 93 டெஸ்ட் மற்றும் 269 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதை காட்டிலும் புத்திசாலித்தனமான மற்றும் ஊக்கமளிக்கும் கேப்டனாக இருந்துள்ளார். தனது அணி வீரர்களுக்கு முழு ஆதரவை வெளிப்படுத்துபவராகவும், அவர்கள் பின்னால் எப்போதும் நிற்பவராக இருந்துள்ளார்.

ரணதுங்கா பிற சாதனைகள்

இலங்கை அணி நிகழ்த்திய பல்வேறு சாதனைகளுக்கு பின்னணியில் இருந்தவராக ரணதுங்கா உள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 1998இல் இலங்கை அணிக்கு முதல் வெற்றி, அதே ஆண்டில் ஆசிய கோப்பை தொடரில் வெற்றி என சாதித்துள்ளார். இலங்கை அணியை உலக அளவில் பலமான அணியாக மாற்றிய ரணதுங்கா ஓய்வுக்கு பின் சில காலம் வர்ணனையாளராக இருந்தார்.

தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பொறுப்பு, இலங்கை அரசியலில் எம்பி என இருந்தவர் தற்போது இருக்கும் தடமே தெரியாத அளவில் உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி