தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Agarkar On Ashwin: திடீரென அஸ்வினை சேர்க்கப்பட்டது ஏன்? தேர்வு குழு தலைவர் அகர்கர் பதில்

Agarkar on Ashwin: திடீரென அஸ்வினை சேர்க்கப்பட்டது ஏன்? தேர்வு குழு தலைவர் அகர்கர் பதில்

Sep 19, 2023, 02:20 PM IST

google News
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் அஸ்வினின் திறமை, அவர் எந்த இடத்தில் உள்ளார் என்பதை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமையும் என்று இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் அஸ்வினின் திறமை, அவர் எந்த இடத்தில் உள்ளார் என்பதை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமையும் என்று இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் அஸ்வினின் திறமை, அவர் எந்த இடத்தில் உள்ளார் என்பதை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமையும் என்று இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை ஒரு நாள் தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட் ஒரு நாள் தொடரில் இந்தியா விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி செப்டம்பர் 22ஆம் தேதி மெஹாலியில் நடைபெறுகிறது.

இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி முதல் இரண்டு போட்டிகளுக்கு கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி சர்ப்ரைசாக ஸ்பின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் 37 வயதாகும் அஸ்வின், 20 மாதங்களுக்கு பிறகு அவர் ஒரு நாள் போட்டியில் மீண்டும் கம்பேக் கொடுக்கிறார்.

அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டது குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியதாவது:

"ரோஹித் சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் போதிய அளவில் விளையாடியுள்ளனர். உலகக் கோப்பைக்கு முன்னர் இந்த வீரர்களுக்கு கொஞ்சம் மனரீதியான ஓய்வு தேவை. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இவர்கள் அனைவரும் திரும்ப வந்து விடுவார்கள்.

அக்‌ஷர் படேல் காயத்தில் இருக்கிறார். அவர் விரைவில் குணமடைவார் என நம்புகிறோம். அக்‌ஷர் படேல் இடத்தை ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வாஷிங்டன் சுந்தர் நிரப்பினார். அஸ்வின் அனுபவமிக்க வீரராக உள்ளார். இதன் காரணமாகவே அவருக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்தோம்.

அக்‌ஷர் படேல் காயம் குணமடையாவிட்டால், உலகக் கோப்பைக்கு சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களை கொண்டு செல்வதற்கு ஏற்ப பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக அஸ்வின், வாஷிங்டன் சுந்தருக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் அமையும்.

அஸ்வினுக்கு இருக்கும் அனுபவத்தை வைத்து பார்த்தால் அவர் நீண்ட நாள் வெள்ளை பந்து கிரிக்கெட் விளையாடாததை ஒரு பொருட்டாக பார்க்க கூடாது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பாக செய்ல்பாட்டார். டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் அவர் திறமையை வெளிப்படுத்தவும், அவர் எந்த இடத்தில் உள்ளார் என்பதை முடிவு செய்யவும் வாய்ப்பாக இருக்கும்"

இவ்வாறு அஜித் அகர்கர் கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் உலலக் கோப்பை தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.

முன்னதாக, இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, அஸ்வினுக்கான வாய்ப்பு கதவுகள் மூடப்படவில்லை, அவர் எந்நேரமும் அழைக்கப்படலாம் என்று கூறியிருந்தார். அவர் சொன்னது போல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார் அஸ்வின்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை