Venus: கன்னி ராசியில் எகிறி அடிக்கும் சுக்கிரன்.. நீச்ச பங்க ராஜயோகத்தில் பணத்தில் மிதக்கும் ராசிகள்
Sep 06, 2024, 09:19 PM IST
Venus: கன்னி ராசியில் எகிறி அடிக்கும் சுக்கிர பகவானால், நீச்ச பங்க ராஜயோகத்தில் பணத்தில் மிதக்கும் ராசிகள் குறித்துக் காண்போம்.
Venus: ஜோதிடத்தின்படி, கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டே உள்ளன. இது சில ராசியினர் மத்தியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன. இதனால் ராஜயோகங்கள் உண்டாகின்றன.
சமீபத்திய புகைப்படம்
கடந்த 2024ஆம் ஆண்டு,சுக்கிர பகவான் ஆகஸ்ட் 25ஆம் தேதி, கன்னிராசியில் நுழைந்தார். அப்படி சுக்கிர பகவான் சஞ்சரிக்கும்போது, நீச்சபங்க ராஜயோகம் உருவாகிறது. இதனால் சில ராசியினருக்கு மிகவும் மங்களகரமான விஷயங்கள் நடக்கின்றன.
சுக்கிர பகவான், கன்னி ராசியில் நுழைந்ததால் சில ராசியினரின் வாழ்வில் வெற்றி, வணிகத்தில் முன்னேற்றம், தொழிலில் ஏற்றம் ஆகியவை உண்டாகும். இப்படி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசியினர் பற்றிக் காணலாம்.
நீச்ச பங்க ராஜயோகம் என்பது என்ன?
ஜோதிடத்தின்படி, நீச்சபங்க ராஜயோகம் ஒரு சக்தி வாய்ந்த யோகமாகக் கருதப்படுகிறது. இது மக்களை ஊக்கம் கொண்டவர்களாகவும், வாழ்வில் நாம் நினைத்த காரியங்களைச் செய்பவர்களாகவும் ஆக்குகிறது.
இந்த நீச்ச பங்க ராஜயோகத்தின்போது, மக்கள் தங்கள் பிரச்னைகளை சமாளிக்கும் திறன்கொண்டவர்களாக உள்ளனர். ஒருவரின் ஜாதகத்தில் கிரகம் பலவீனமாக இருந்தால் நீச்ச பங்க ராஜயோகம் உண்டாக வாய்ப்புள்ளது.
நீச்ச பங்க ராஜயோகத்தால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்:
கன்னி:
கன்னி ராசியில் சுக்கிர பகவானால், உண்டாகும் நீச்ச பங்க ராஜயோகத்தால், கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்டம் உண்டாகிறது.
கன்னி ராசியினரின் ஆளுமை பெரிதும் மேம்படுகிறது. கன்னி ராசியினர், வெகுநாட்களாக தங்கள் இல்வாழ்க்கைத்துணையுடன் பிரச்னையுடன் இருந்தால், இக்காலத்தில் இணக்கத்தைப் பெறுவீர்கள். கடுமையாக உழைக்கும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிட்டி, வாழ்வில் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வார்கள்.
கன்னி ராசியினர், தங்கள் குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில், சிங்கிளாக இருக்கக் கூடிய கன்னி ராசியினருக்கு, திருமண முன்மொழிவுகள் வரலாம்.
மகரம்:
மகர ராசியின் ஒன்பதாம் வீட்டில் நீச்ச பங்க ராஜயோகம் உருவாகிறது. இந்த காலம் மகர ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கும். கன்னி ராசியினருக்கு சரியான பலனைத் தரும். வருவாய் மற்றும் நிதி நிலை வாய்ப்புகள் உருவாகும். மகர ராசியினருக்கு கிடைக்காத வாய்ப்புகள் எல்லாம், இந்த காலத்தில் கிடைக்கும்.
நிலுவையில் நீங்கள் வைத்திருந்த அனைத்து பணிகளும் இப்போது முடிவடையலாம். பணி தொடர்பான சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில், இறைவழிபாட்டில் அதிகம் ஈடுபடுவீர்கள்.
தனுசு:
தனுசு ராசியின் கர்ம வீட்டில் சுக்கிரனின் சஞ்சாரம் நடப்பதால், பல நன்மைகள் நடக்கும். வெகுநாட்களாகப் பணியிடத்தில் கிடைக்காமல் இருந்த அங்கீகாரம் கிடைத்துவிடும்.
இந்த காலகட்டத்தில் பல ஒப்பந்தங்கள் மற்றும் புதிய வருமான ஆதாரங்கள் உண்டாகி பெரும்லாபத்தை எதிர்பார்க்கலாம். தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் அதிர்ஷ்டமானது மற்றும் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் புதிய உயரங்களைத் தொடலாம். பணியிடத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்