August Trip : ஆகஸ்ட் மாதம் குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற சுற்றுலாத்தலம்.. செலவும் கம்மி தான்..என்ஜாய் பண்ணலாம்!
August Trip : ஏழைகளின் ஊட்டி என்று அழைப்படும் ஏற்காடு, சேலம் மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த ஆகஸ்ட் மாதம் ஏற்காடு சென்று குடும்பத்துடன் என்ஜாய் பண்ணலாம்.
கோடை விடுமுறை என்றால் ஊட்டி, கொடைக்கானல் என்று மட்டுமே பார்க்கப்பட்ட காலம் மாறி இன்று மக்கள் மனதை கவரும் பல இடங்கள் வந்துவிட்டது. கோடைக்காலங்களில் மக்கள் மலைபிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். அந்தவகையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடம் என்றால் ஏற்காடு என்று சொல்லலாம்.
ஏழைகளின் ஊட்டி என்று அழைப்படும் ஏற்காடு, சேலம் மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த ஆகஸ்ட் மாதம் ஏற்காடு சென்று குடும்பத்துடன் என்ஜாய் பண்ணலாம்.
20 கொண்டை ஊசி வளைவுகள், வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை, பசுமையான காட்சிகள், வெப்பத்தை தணிக்கும் இதமான சூழல் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது.
ஏற்காடு
கிழக்கு தொடர்ச்சி மலை தொடர்க்ளில் சேர்வராயன் மலைகளில் உள்ளது. பல்லுயிர் பெருக்கமும், கலாச்சாரமும் நிறைந்த இடம். ஏற்காடு, தமிழக மலைகளிலே முத்தான இடம். நகரின் வெயில் மற்றும் பரபரப்பில் இருந்து தப்பிக்க உகந்த இடம். ஏற்காடு தனது அழகால் உங்களை அசரடிக்கும். பசுமையும், குளுமையும் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
காஃபி பயிர் தோட்டங்கள் மலையை சுற்றி பச்சை கம்பளம் விரித்ததைபோல் இருக்கும். அருவிகளின் ஆர்பரிப்பும், காடுகளும் அதில் உள்ள உள்ளூர் விலங்குகளும், தாவரங்களும், வரலாற்று சிறப்புகள், பாரம்பரியம் போன்ற பன்முகத்தன்மையும் உங்களை மெஸ்மரிசம் செய்யும். சேலம், திருச்சி விமான நிலையங்களும், சேலம் ரயில் நிலையத்தில் இருந்தும் எளிதாக ஏற்காடு சென்றுவிடலாம்.
ஏற்காட்டில் ஏராளமானோர் வருகை
சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதுவும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறையை கொண்டாட ஏற்காட்டில் ஏராளமானோர் வருகை இருக்கும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அவர்கள், அங்குள்ள ஏரியில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் படகு சவாரி செய்தும், செல்பி எடுத்தும் மகிழ்வார்கள். குளுமையான சீதோஷ்ண நிலை இருக்கும்.
கிளியூர் நீர்வீழ்ச்சி
அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, மான் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றி பார்ப்பது அருமையாக இருக்கும். ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால், கிளியூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் சென்று உற்சாகமாக குளித்து மகிழலாம்.
கடந்தவாரம் ஏற்காடு நகர பகுதி, நாகலூர், மஞ்சக்குட்டை, படகு இல்லம், சேர்வராயன் கோயில், பகோடா பாயின்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையாக மூடுபனி நிலவியது.
சாலை ஓரத்தில் கடைகள்
அண்ணா பூங்கா அருகில் ஏற்காடு ஏரி உள்ளதால் இங்கு வருபவர்கள் இங்கு சென்று படகு சவாரி செய்யலாம். குடும்பத்துடன் சென்று படகு சவாரி செல்ல விரும்புவர்கள் இங்கு செல்லலாம். பின்னர் இங்கு இருந்து வெளியே வந்தால் சாலை ஓரத்தில் கடைகள் வரிசையாக காண்ப்படும்.
அங்கு காலிஃபளார் சில்லி, பஜ்ஜி, நூடுல், பிரட், ஆம்லெட்,கான், பழங்கள், டீ, காபி என சொல்லிக்கொண்டே போகலாம். விலையும் குறைவு தான். குடும்பத்துடன் வருபவர்கள் இதனை சுவைத்துவிட்டு மற்ற இடங்களுக்கு செல்லலாம். எனவே இந்த ஆகஸ்ட் மாதல் ஏற்காடு சென்று குடும்பத்துடன் மகிழுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்