வில்வ மரத்தடியில் லிங்கம்.. பிரதிஷ்டை செய்த ஜமதக்னி முனிவர்.. அருள் பாலித்த ஜமதக்னீஸ்வரர்..!
Dec 11, 2024, 07:00 AM IST
Jamadagniswarar: எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் இருக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் அரியலூர் மாவட்டம் உடையவர் தீயனூர் அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில்.
Jamadagniswarar: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக்கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவை ஆண்ட மன்னர்கள் உலகமெங்கும் பறந்து விரிந்து காணப்பட்டனர்.
சமீபத்திய புகைப்படம்
போர் செய்து சென்ற இடமெல்லாம் சிவபெருமான் மீது கொண்ட பக்தியின் காரணமாக அங்கு கோயில்கள் கேட்டு வழிபாடுகள் நடத்தி வந்துள்ளனர். குடி பெயர்ந்து வாழ சென்ற மக்களும் சிவபெருமானின் மீது கொண்ட பக்தியின் காரணமாக கோயில் கட்டி வழிபாடுகள் செய்தனர்.
குறிப்பாக இந்தியாவில் இன்று வரை மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் சிவபெருமானுக்கு இருந்து வருகிறது. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
அந்தக் கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து நின்று வரை வரலாற்றுச் சரித்திர குறியீடாக பிரம்மாண்டமாக நின்று வருகின்றன. சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் மிகப்பெரிய எதிரிகளாக இருந்தாலும் போட்டி போட்டுக் கொண்டு சிவபெருமானுக்கு மிகப்பெரிய கோயில்களை கட்டி சென்றுள்ளனர்.
மிகப்பெரிய மன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில் அதற்கு சான்றாக திகழ்ந்து வருகிறது. மேலும் பாண்டியர்களால் கட்டப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் மிகப்பெரிய பக்தியின் வெளிப்பாடாக உள்ளது.
இப்படி எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் இருக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் அரியலூர் மாவட்டம் உடையவர் தீயனூர் அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் ஜமதக்னீஸ்வரர் எனவும் தாயார் அமிர்தாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர். கோயிலில் வில்வமரம் தல விருட்சமாக விளங்கி வருகிறது. தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
சதுர வடிவில் அமைந்த பலகை போன்ற பீடத்தின் மேல் கருங்கல்லாலான லிங்கத் திருமேனியாக ஜமதக்னீஸ்வரர் காட்சி கொடுத்து வருகின்றார். இந்த கோயில் சோழர்களால் கட்டப்பட்டது என கல்வெட்டுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
உடல் நோய்களை குணப்படுத்தும் காரகனாக ஜமதக்னீஸ்வரர் விளங்கி வருகின்றார். மேலும் இந்த கோயிலில் வந்து வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
தல வரலாறு
இந்த ஊரில் வெப்பம் மிகுந்து காணப்பட்ட காரணத்தினால் இது தீயனூர் என அழைக்கப்பட்டுள்ளது. புராண காலங்களில் இந்த இடம் வில்வமரம் நிறைந்த வனப்பகுதியாக காணப்பட்டுள்ளது. இந்த காட்டுப் பகுதியில் சப்த ரிஷிகளில் ஒருவராக திகழ்ந்து வந்த ஜமதக்னி முனிவர் சிவபெருமானை நோக்கி கடுமையான தவத்தை மேற்கொண்டு வந்தார்.
இங்கு இருந்த வில்வ மரத்தின் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அந்த லிங்கமே பின்னாளில் ஜமதக்னீஸ்வரர் என்று பெயர் பெற்றது. அக்னி பகவான் வழிபட்ட காரணத்தினால் இவருக்கு அக்னீஸ்வரர் என்ற திருப்பெயரும் உண்டு.
அதன் காரணமாகவே இந்த கோயிலை ஒட்டி உள்ள குளம் அக்னி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. ஜமதக்னி அறிவுரையின்படி பரசுராமர் தனது தாயாரான ரேணுகா தேவியை கொலை செய்தார். இதனால் தோஷம் ஏற்பட்ட பரசுராமர் பழு ஊருக்கு வடக்கே ஓடும் மருதை ஆற்றில் நாள்தோறும் தீர்த்தம் ஆடி சிவபெருமானை வழிபட்டார்.