2025 கிரக பெயர்ச்சி: புரட்டிப் போடப் போகும் சனி குரு.. ராகுவோடு சேர்க்கிறார் சனி.. ராகு கேது இடமாற்றம்.. என்ன நடக்கும்?
Dec 03, 2024, 12:51 PM IST
Horoscope 2025: 2025 ஆம் ஆண்டு கிரக மாற்றங்கள் ஏற்படும் வரை தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலைகள் உங்களுக்கு அப்படியே இருக்கும். அந்த வகையில் வரும் 2025 ஆம் ஆண்டு நிகழக்கூடிய முக்கியமான கிரகங்களின் பெயர்ச்சிகள் குறித்து இங்கு காண்போம்.
Horoscope 2025: புத்தாண்டு என்றாலே சிறப்பு தான். தற்போது 2025 ஆம் ஆண்டு இனிதே தொடங்குகிறது. ஒவ்வொரு புத்தாண்டும் நல்ல முறையில் இருக்க வேண்டுமென அனைவரும் சிந்திப்பது சகஜம் தான். ஆனால் கிரகங்களின் மாற்றங்களை பொறுத்த அளவில் பல்வேறு விதமான சுப மற்றும் அசுப பலன்கள் அனைவருக்கும் உண்டாகும்.
சமீபத்திய புகைப்படம்
இந்த புத்தாண்டில் பல பெரிய கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளும் சிறப்பான சூழ்நிலைகளை பெறப்போகின்றனர். அவ்வப்போது பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட்டாலும் பல யோகங்கள் கிடைக்கக்கூடும். ஒரு சில ராசிகளுக்கு மோசமான சூழ்நிலை இருந்தாலும் அதன் நிலை மாறுபடுகின்ற காரணத்தினால் பலன்கள் சிறப்பாக இருக்கும்.
அந்த வகையில் இந்த புத்தாண்டில் ஒவ்வொரு ராசியை சேர்ந்தவர்களும் எந்தெந்த விஷயங்களில் எப்படி இருக்க வேண்டும். 2025 ஆம் ஆண்டு கிரக மாற்றங்கள் ஏற்படும் வரை தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலைகள் உங்களுக்கு அப்படியே இருக்கும். அந்த வகையில் வரும் 2025 ஆம் ஆண்டு நிகழக்கூடிய முக்கியமான கிரகங்களின் பெயர்ச்சிகள் குறித்து இங்கு காண்போம்.
கிரக பெயர்ச்சிகள்
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் தேதி அன்று புதன் பகவான் தனுசு ராசிக்கு செல்கிறார். அதன் பின்னர் அந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி மீண்டும் தனுசு ராசிக்கு செல்வார் அதோடு அந்த ஆண்டு முடிவடைகின்றது. இந்த 2025 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சிகள் என அடுத்தடுத்து முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்க உள்ளன.
கிரகங்களின் மாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலவையான பலன்கள் கிடைக்கக்கூடும். குறிப்பாக இந்த 2025 ஆம் ஆண்டு சனி மற்றும் ராகு சேர்ந்த 50 நாட்கள் பயணம் செய்ய உள்ளனர். இதனால் பல்வேறு விதமான அம்சங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடும்.
சனி பெயர்ச்சி
2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் மீன ராசிக்கு செல்கிறார்.
குரு பெயர்ச்சி
2025 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார்.
ராகு கேது பெயர்ச்சி
மே 18ஆம் தேதி அன்று ராகு மற்றும் கேது இவர்கள் இருவரும் தங்களது இடத்தை மாற்றுகின்றனர் ராகு பகவான் கும்ப ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசிக்கும் இடம்பெயர்ந்து பயணம் செய்யப்போகின்றனர்.
மேலும் 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை சனி மற்றும் ராகு இவர்கள் இருவரும் சேர்ந்து 50 நாட்கள் மீன ராசியில் சஞ்சாரம் செய்யப் போகின்றனர்.
இவ்வாறு இந்த கிரகங்களின் மாற்றமானது கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகள் சுப பலன்களும் சில ராசிகள் அசுப பலன்களும் பெறப்போகின்றனர்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.