2025 சனி பெயர்ச்சி.. ஏழரை சனி தொடங்கும் 3 ராசிகள்.. கெட்டியா வச்சுக்கோங்க.. சனி வரார்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  2025 சனி பெயர்ச்சி.. ஏழரை சனி தொடங்கும் 3 ராசிகள்.. கெட்டியா வச்சுக்கோங்க.. சனி வரார்!

2025 சனி பெயர்ச்சி.. ஏழரை சனி தொடங்கும் 3 ராசிகள்.. கெட்டியா வச்சுக்கோங்க.. சனி வரார்!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 03, 2024 09:42 AM IST

Sani Peyarchi: சனிபகவான் 2025 ஆம் ஆண்டு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு ஏழரை சனி தொடங்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

2025 சனி பெயர்ச்சி.. ஏழரை சனி தொடங்கும் 3 ராசிகள்.. கெட்டியா வச்சுக்கோங்க.. சனி வரார்!
2025 சனி பெயர்ச்சி.. ஏழரை சனி தொடங்கும் 3 ராசிகள்.. கெட்டியா வச்சுக்கோங்க.. சனி வரார்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 2025 ஆம் ஆண்டு சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு ஏழரை சனி தொடங்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கும்ப ராசி

சனிபகவான் 2025 ஆம் ஆண்டு இடம்பெயரும் பொழுது உங்களுக்கு ஏழரை சனியின் இறுதி கட்டம் தொடங்குகிறது. இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த பல்வேறு சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையக்கூடிய சூழ்நிலைகள் உண்டாக்கும். மகிழ்ச்சியான தருணங்கள் உங்களுக்கு கிடைக்கும். 

கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல உயர்வு கிடைக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவினர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

மீன ராசி

சனி பகவானின் 2025 ஆம் ஆண்டு இடமாற்றத்தால் உங்களுக்கு ஏழரை சனியின் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது. இதனால் நீங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய மாற்றங்களை காணப் போகின்றீர்கள். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும். பல இடங்களில் உங்களுடைய பொறுமைகள் சோதிக்கப்படும். 

நிறைய சவால்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கடினமான காலமாக இது உங்களுக்கு இருக்கும். ஆன்மீகத்தில் நீங்கள் அதிக நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். ஆன்மீகத்தின் தாக்கம் உங்களுக்கு கட்டாயம் இருக்கும். சிக்கல்கள் தேடி வந்தாலும் நீங்கள் பொறுமையாக இருப்பது நல்லது. பல்வேறு விதமான சவால்கள் உங்களுக்கு நெருக்கடிகளை கொடுக்கக்கூடும்.

மேஷ ராசி

2025 ஆம் ஆண்டு சனிபகவானின் இடமாற்றம் உங்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டத்தை தொடங்குகிறது. ஏழரை சனியின் முதல் கட்டம் என்கின்ற காரணத்தினால் உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்க கூடும். நிதி ரீதியாக நீங்கள் பலன்களை காண கூடும். திடீரென உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்க கூடும். 

ஏழரை சனியின் முதல் கட்டம் என்கின்ற காரணத்தினால் உங்களுக்கு அந்த அளவுக்கு தீவிரம் இருக்காது. எதிர்காலத்தில் நீங்கள் மிகப்பெரிய சிக்கல்களை சந்திக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். இருப்பினும் இந்த காலகட்டம் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்களை நீங்கள் சமாளிக்க கூடிய திறனை நீங்களே வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் உங்களை அசைக்க முடியாத அடிக்கு கொண்டு செல்வார் சனி பகவான்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner