Weekly Horoscope: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான வார ராசிபலன்கள்!
Oct 06, 2024, 01:46 PM IST
Weekly Horoscope: துலாம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கு வரும் அக்டோபர் 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையிலான வாரராசிபலன்கள் இதோ!
துலாம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கு வரும் அக்டோபர் 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையிலான வாரராசிபலன்கள் இதோ!
துலாம்
துலாம் ராசிக்காரர்களுகு இந்த வாரம் மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலைத்து இருக்கும். முழு நம்பிக்கை உடன் செயல்படுவீர்கள். கலை அல்லது இசையில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தந்தையின் வழியில் அனுகூலம் கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் உதவியால் கடினமான காரியங்கள் முடியும். வியாபாரத்தில் லாப வாய்ப்புகள் உருவாகும். தொழில் ரீதியாக சுற்றுலா செல்ல திட்டம் தீட்டலாம்.
சமீபத்திய புகைப்படம்
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் மனமும் அலைக்கழிக்கக்கூடும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும். பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இருக்கலாம். இந்த வாரம் வேலை மற்றும் வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த சூழல் இருக்கும். உங்கள் பணியிடத்திலும் வியாபாரத்திலும் கவனத்துடன் செயல்படுங்கள். புதிய திட்டங்களில் பணியைத் தொடங்குவதற்கு முன், நிச்சயமாக ஒரு அனுபவமுள்ள நபரை அணுகவும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்புகள் குறையும். வாக்குவாத சூழ்நிலைகளில் இருந்து விலகி இருங்கள். கவனத்துடன் இருங்கள். வாரத்தின் நடுப்பகுதியில் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய நம்பிக்கை உருவாகும். மனதில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இன்னும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். வருமானம் அதிகரிக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் நிலைமைகளில் மாற்றம் ஏற்படும். சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். வாரத்தின் நடுப்பகுதியில் தொழில் ரீதியாக பயணம் செல்லலாம். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் அமையும். மாதக் கடைசியில் குடும்பத்தில் ஒருவரின் உடல்நலம் பாதிக்கப்படலாம். மன அழுத்தம் உங்களை தொந்தரவு செய்யலாம். வாகனங்கள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள்.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் தன்னடக்கத்துடன் இருப்பது முக்கியம். உங்கள் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருங்கள். குடும்பத்தில் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். பேச்சு, எழுத்து உள்ளிட்ட அறிவுசார் வேலைகளில் சுறுசுறுப்பு கூடும். செயலில் வேகம் கூடும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் முழு நம்பிக்கை, தெளிவு உடன் செயல்படுவீர்கள். ஆனால் உங்கள் மனதில் சில சமயம் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படலாம். நேர்மறையான சிந்தனை உங்களுக்கு நன்மைகளை தரும். செயலில் பொறுமையை கடைப்பிடியுங்கள். நண்பரின் உதவியால் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம்.
மீனம்
மீனம் ராசிக்கார்களுக்கு மனதில் குழப்பம் இருக்கும். நம்பிக்கை குறைவு ஏற்படும். உரையாடலில் பொறுமையாக இருங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சமய காரியங்கள் நடைபெறலாம். கல்விப் பணிகளில் வெற்றி பெறுவீர்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.