மணி பிளாண்ட் முதல் தானம் வரை.. நிதி பிரச்னைகள் நீங்கி வீட்டில் பணம் தங்க எளிய வாஸ்து டிப்ஸ் இதோ
Dec 14, 2024, 06:45 PM IST
Money Remedies: வாஸ்து சாஸ்திரம் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு அளிப்பதாக நம்பப்படுகிறது. வாஸ்துவை ன்பற்றுவதன் மூலம், வீட்டில் நேர்மறை ஆற்றல் பாய்கிறது. எதிர்மறை ஆற்றல் அகற்றப்படுகிறது. நிதி பிரச்னைகள் நீங்கி, வீட்டில் பணம் தங்க பின்னபற்ற வேண்டிய வாஸ்து சாஸ்திர டிப்ஸ்களை பார்க்கலாம்
நிதி பிரச்னை என்பது பலராலும் எதிர்கொள்ளப்படும் பொதுவான விஷயமாக உள்ளது. நிதி சார்ந்த பிரச்னைகளில் இருந்து விடுபட சில பரிகாரங்களை கடைபிடிப்பது நல்லது. இந்த பரிகாரங்களை நீங்கள் பின்பற்றினால், பொருளாதார பிரச்னையின்றி மகிழ்ச்சியாக இருக்கலாம். பணப் பிரச்னைகளைத் தவிர்க்க பலர் வாஸ்துவை பின்பற்றுகிறார்கள்.
சமீபத்திய புகைப்படம்
வாஸ்துவைப் பின்பற்றுவதன் மூலம், வீட்டில் நேர்மறை ஆற்றல் பாய்கிறது. எதிர்மறை ஆற்றல் அகற்றப்படுகிறது. அந்த வகையில் நிதி பிரச்னைகள் நீங்கி, வீட்டில் பணம் இருக்கவும் செய்ய வேண்டிய விஷயங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.
வீட்டை சுத்தமாக வைத்திருங்கள்
வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்? வீடு சுத்தமாக இருந்தால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். வீட்டில் குப்பை, உபயோகமற்ற பொருள்கள், உடைந்த பொருள்கள் இருக்கக்கூடாது. தென்கிழக்கு திசையை குப்பையில் இருந்து பாதுகாக்க வேண்டும். தென்கிழக்கில் குப்பை இருந்தால், நீங்கள் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
உப்பு வைத்து சுத்தம் செய்தல்
பல நேரங்களில் வீட்டின் எதிர்மறை ஆற்றல் உங்கள் நிதிநிலையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே, இந்த மாதிரி சூழ்நிலையில் இருந்து விடுபட தண்ணீரில் உப்பைக் கலந்து தரையைத் துடைப்பதன் மூலம், வீட்டின் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டலாம். எதிர்மறை ஆற்றல் நீங்கிவிட்டாலே நிதி தொடர்பான மந்த நிலையும் காணாமல் போய்விடும்
மணி பிளாண்ட்
வீட்டில் நிதி பிரச்னைகள் இருந்தால், ஒரு மணி பிளாண்ட் வைத்திருங்கள். நிதிச் சிக்கல்களில் இருந்து எளிதாக வெளியேற மணி பிளாண்ட் உங்களுக்கு உதவும். குறிப்பாக வீட்டின் தென்கிழக்கில் மணி பிளாண்ட் வைப்பதன் மூலம் நேர்மறை ஆற்றலை பெறுவதோடு, எதிர்மறை ஆற்றலை நீக்கிவிடலாம். அதேபோல் நிதி பிரச்சனைகளில் சிக்க தவித்தாலும் அதிலிருந்து விடுபடலாம்
வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் செய்ய வேண்டிய மாற்றம்
வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் சிரிக்கும் புத்தர் சிலையை அல்லது படத்தை வைத்தால், நிதி பிரச்னைகள் நீங்கும் என கூறப்படுகிறது. அத்தோடு வீட்டில் மகிழ்ச்சி நிலைக்கும். எனவே இந்த மாற்றத்தை செய்யலாம்
தானம் செய்வது
ஏழைகளுக்கு ஆடை, உணவு, பணம் தானம் செய்வதன் மூலம் பணப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். குறிப்பாக வியாழன் அல்லது பௌர்ணமி நாட்களில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது நன்மை பெற உதவும்
இப்படிச் செய்தால் உங்களுக்குப் பண பிரச்னை வராது
சூரியனுக்கு நீராடினால், நிதி பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டு மகிழ்ச்சியாக இருக்கலாம். பணப்பிரச்னையால் அவதிப்படுபவர்களும் ஓம் ஸ்ரீ மஹாலட்சுமியை நம என்று 108 முறை ஜெபித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
'ஓம் யக்ஷாய குபேராய வைஷ்ரவணாய தனதன்ய பதயே தன தானிய சம்ரித்தி தபய ஸ்வாஹா' என்று வெள்ளிக்கிழமை 108 முறை பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். நிதி பிரச்னைகளும் நீங்கும்.
பொறுப்புதுறப்பு: இந்தக் கட்டுரையில் உங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் பரிந்துரைகள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூற முடியாது. நிபுணர்களின் ஆலோசனையின்படி இந்த தகவலை நாங்கள் வழங்குகிறோம். அவற்றை பின்பற்றும் முன் சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது நல்லது.