தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Vagra Peyarchi 2024: ’விருச்சிகம் ராசிக்கு அடுத்த 100 நாட்களில் கல்யாணம், குழந்தை உறுதி!’ குரு வக்ர பெயர்ச்சி பலன்!

Guru Vagra Peyarchi 2024: ’விருச்சிகம் ராசிக்கு அடுத்த 100 நாட்களில் கல்யாணம், குழந்தை உறுதி!’ குரு வக்ர பெயர்ச்சி பலன்!

Kathiravan V HT Tamil

Oct 01, 2024, 05:38 PM IST

google News
Guru Vagra Peyarchi 2024: இந்த காலத்தில் திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு வாரிசுகள் கிடைக்கும். சுபகாரிய தடைகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.
Guru Vagra Peyarchi 2024: இந்த காலத்தில் திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு வாரிசுகள் கிடைக்கும். சுபகாரிய தடைகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.

Guru Vagra Peyarchi 2024: இந்த காலத்தில் திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு வாரிசுகள் கிடைக்கும். சுபகாரிய தடைகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.

குரு பகவான் ஆனவர் வரும் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வரை 119 நாட்கள் வக்ரம் பெற உள்ளார். 

சமீபத்திய புகைப்படம்

மேஷம் முதல் மீனம் வரை.. யாருக்கு சூப்பரான நாள்? நவம்பர் 27ம் தேதி 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Nov 26, 2024 09:16 PM

சனி ராகு முடிவெடுத்துவிட்டனர்.. இந்த ராசிகள் நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. இனி பண மழையா கொட்டுமாம்.. ஆனந்த கண்ணீர் தானாம்..!

Nov 26, 2024 05:15 PM

குரு.. அடடே இந்த ராசிகளா.. இனி பணமழை கொட்டுமாமே.. உச்ச ராசிகள் அணிவகுப்பு.. மகிழ்ச்சி ஊஞ்சலில் ஆடுவது உறுதி!

Nov 26, 2024 05:01 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..நாளை நவ.27 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Nov 26, 2024 03:41 PM

ஜாக்பாட் அடிக்கப்போகுது.. கடகத்தில் நுழைந்த செவ்வாய்.. இந்த ராசிகள் ரெடியா இருங்க!

Nov 26, 2024 03:24 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே..நாளை நவ.27 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Nov 26, 2024 03:20 PM

ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் வலுவாக இருக்கும்போது, ஜாதகர் சத்தியத்தின் பாதையில் செல்வார். கண்கள் மற்றும் முகத்தில் ஒரு பிரகாசமான தோற்றம் இருக்கும். ஒரு மனிதனின் ஒழுக்கத்தை சிறப்பாக தரக்கூடிய கிரகம் குரு ஆகும். பெருமை, மேன்மை, தனம், செல்வாக்கு, கல்வி, குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தரும் கிரமாக குரு உள்ளார்.  இயற்கை சுபர் ஆக உள்ள குரு பகவான் பெருந்தன்மை குணத்திற்கு சொந்தக்காரர். 

விருச்சிகம் ராசியும் குரு பகவானும் 

விருச்சிகம் ராசியை பொறுத்தவரை விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் உள்ளது. கடந்த மே மாதம் அன்று மேஷம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி ஆனார்.  இதனால் குரு பகவான் உங்கள் ராசியை பார்க்கும் நிலை ஏற்பட்டது. குரு பார்க்க கோடி நன்மை ஏற்படும். திருணம். செல்வம், செல்வாக்கு போன்றவற்றை குரு பகவான் தருவார்.  

சுப காரியங்கள் கைக்கூடும் 

இந்த காலத்தில் திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு வாரிசுகள் கிடைக்கும். சுபகாரிய தடைகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.  எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். அரசு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். 

சொத்து சேர்க்கை உண்டாகும் 

குரு பகவான் ஆனவர் ராசி, 3ஆம் வீட்டையும் பார்க்கிறார். சிலர் சொத்துக்களை விற்று சுபகாரியங்களையும், தொழில் மாற்றங்களையும் செய்து வெற்றி பெறுவீர்கள். பூர்வீக சொத்து வழியில் இருந்த சிக்கல்கள் நீங்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். பொன், பொருள், ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். 

குரு பகவான் ஒன்பதாம் இடத்தை பார்ப்பதால் கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். ஆடிட்டர், கணக்காளர்கள். வங்கி பணியாளர்கள், ஆசிரியர்கள், தெய்வப்பணி செய்பவர்களுக்கு நன்மைகள் உண்டாகும். 

தீராத நோய்கள் தீரும் 

சுவாச உறுப்புகள், காது, மூக்கு, தொண்டை சார்ந்த பிரச்னைகள், நரம்பு மண்டல பாதிப்புகள், மண்ணீரல், கல்லீரல் நோய்கள், வாயு கோளாறு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் தீரும்.  

குரு பகவான் வழிபாடு வாழ்கையில் மேன்மையை தரும். திருச்செந்தூருக்கு தீர்த்த யாத்திரை செல்லுதல் வெற்றியை ஏற்படுத்தி தரும். ஆலங்குடி, தென்குடி திட்டை, சென்னை திருவள்ளி தாயம், காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தில் உள்ள காயரோகணேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் அடுத்த அகரம் கோயில், சிவகங்கை பட்டமங்கலம் வெள்ளியங்கி குருஸ்தலம், சோழவந்தான் குருஸ்தலம், குருவித்துறை போன்ற குரு பகவானின் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்ய சங்கடங்கள் தீர்ந்து நன்மைகள் கிடைக்கும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி