Kayal Serial: திருமணம் முடிந்த கையோடு அடுத்த அதிரடி.. சபதம் எடுத்த கயல் - சிக்குவாரா பெரியப்பா?-kayal serial today episode promo on september 28 2024 indicates new twist - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: திருமணம் முடிந்த கையோடு அடுத்த அதிரடி.. சபதம் எடுத்த கயல் - சிக்குவாரா பெரியப்பா?

Kayal Serial: திருமணம் முடிந்த கையோடு அடுத்த அதிரடி.. சபதம் எடுத்த கயல் - சிக்குவாரா பெரியப்பா?

Aarthi Balaji HT Tamil
Sep 28, 2024 01:14 PM IST

Kayal Serial: என் திருமணம் முடிந்தவுடன் எனக்கு இருக்கும் அடுத்த பொறுப்பு என்னவென்றால் என் அப்பா விட்டு விட்டு சென்ற வேலையை முடிப்பது தான். கூடிய சீக்கிரமே என் அப்பா மேல் விழுந்த பழியையும், சூழ்ச்சி செய்த பகையையும் விரட்டி அடிப்பேன் என்றார் கயல்.

Kayal Serial: திருமணம் முடிந்த கையோடு அடுத்த அதிரடி.. சபதம் எடுத்த கயல் - சிக்குவாரா பெரியப்பா?
Kayal Serial: திருமணம் முடிந்த கையோடு அடுத்த அதிரடி.. சபதம் எடுத்த கயல் - சிக்குவாரா பெரியப்பா?

அதற்கு கயல், " எங்க சொந்த ஊர்ல எந்த பாவமும் பாவமும் அறியாத எங்க அப்பா மேல ஒரு பொய்யான பழியும், பகையும் இன்னும் இருக்கு. நல்ல மனுஷன் ஆனா அவரு கலங்கடிக்கப்பட்டார். துரோகத்துல சரிஞ்சாரு. பொய்யும், பகையும் அவரை இந்த உலகத்திற்கு தப்பானவராக காட்டிவிட்டது. அவர் உயிரோடு இருக்கும்போதே தன் மேல் விழுந்த பழியை விரட்டி ஓட வைக்க வேண்டும் என்று நினைத்தார். 

சபதம் எடுக்கும் கயல்

ஆனால் அதற்கு அந்த இறைவன் வழி வகுத்து கொடுக்காமல், பதிலே எடுத்துக்கொண்டார். என் திருமணம் முடிந்தவுடன் எனக்கு இருக்கும் அடுத்த பொறுப்பு என்னவென்றால் என் அப்பா விட்டு விட்டு சென்ற வேலையை முடிப்பது தான். கூடிய சீக்கிரமே என் அப்பா மேல் விழுந்த பழியையும், சூழ்ச்சி செய்த பகையையும் விரட்டி அடிப்பேன். இது சத்தியம் “ என்றார். 

நேற்றைய எபிசோட்

கயலின் ரிசப்ஷன் நடந்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென்று ராஜேஸ்வரி, கயலிடம் ஏதோ ஒன்றை கூறுகிறாள். அதைக் கேட்ட கயல், அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறாள். கயலின் ரிசப்ஷன் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது மேடை ஏறிய ராஜேஸ்வரி, கயலுக்கு வைர நெக்லஸை பரிசளித்தாள். அத்துடன் மைக்கை பிடித்து பேசிய ராஜேஸ்வரி கயல் போன்ற ஒரு பெண் கிடைப்பதற்கு எழில் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் அவளை புரிந்து கொள்ளாமல் நான் சில விஷயங்களை செய்தேன். ஆனால், அவள் நான் தவறு செய்த இடத்தில் அதை தவறு என்று சுட்டிக்காட்டியதோடு மட்டுமில்லாமல், முடிந்தவரை எனக்கு சூழ்நிலையை புரிய வைக்க அவள் நிறைய போராட்டங்களை சந்தித்தாள். ஒரு கட்டத்தில் அவளுடைய நல்லுள்ளம் எனக்கு புரிய ஆரம்பித்தது என்றார். 

கயல் அண்ணன் பேச்சு

அடுத்து வந்து பேசிய கயலின் அண்ணன் மூர்த்தி, “ என் திருமண நாளை கூட நான் மறந்துவிடுவேன். ஆனால் என் தங்கையின் திருமண நாளை என்னால் மறக்க முடியாது. நான் இங்கு நிற்பதற்கு காரணமே, அவள் தான். அவள் இல்லை என்றால் நான் இல்லை. 

அப்பா இறந்த பிறகு நான் செய்ய வேண்டிய அனைத்தையும் தனியாக நின்று செய்து காட்டி இருக்கிறார். அவள் எப்போதும் எங்களுக்கு தெய்வம் தான் “ என்றார். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.