தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Makaram Money Luck: ’மகரம் ராசி, அவிட்டம் நட்சத்திரத்திற்கு கோடீஸ்வர யோகம் எப்போது?’ ஏற்றி விட போகும் குரு, சனி, புதன்!

Makaram Money Luck: ’மகரம் ராசி, அவிட்டம் நட்சத்திரத்திற்கு கோடீஸ்வர யோகம் எப்போது?’ ஏற்றி விட போகும் குரு, சனி, புதன்!

Kathiravan V HT Tamil

Aug 12, 2024, 09:54 PM IST

google News
குரு, சனி, புதன் ஆகிய தசைகள் வருகின்றது. மகரம் ராசிக்கு 35 முதல் 60 வயது வரை உள்ள சனி தசையும், அதற்கு பின்னர் வரும் புதன் தசையும் மிகப்பெரிய வளர்ச்சியை தரக்கூடும்.
குரு, சனி, புதன் ஆகிய தசைகள் வருகின்றது. மகரம் ராசிக்கு 35 முதல் 60 வயது வரை உள்ள சனி தசையும், அதற்கு பின்னர் வரும் புதன் தசையும் மிகப்பெரிய வளர்ச்சியை தரக்கூடும்.

குரு, சனி, புதன் ஆகிய தசைகள் வருகின்றது. மகரம் ராசிக்கு 35 முதல் 60 வயது வரை உள்ள சனி தசையும், அதற்கு பின்னர் வரும் புதன் தசையும் மிகப்பெரிய வளர்ச்சியை தரக்கூடும்.

எந்த சந்தர்ப்பத்திலும் நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் என்று எண்ணிக்கொண்டு இருக்கும் மகரம் ராசிக்காரர்கள் கடினமாக உழைப்பதன் மூலம் வெற்றியை அடைவார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற ஆர்வமாக இருப்பார்கள். பொறுப்புடன் செயல்படும் இவர்களுக்கு பணியின் முக்கியத்துவம் மற்றும் நேர்த்தி பிரதானமான ஒன்றாக இருக்கும். அமைதியாகவும் திடமாகவும் இருப்பார்கள். மனதில் நினைத்ததை அடைவதற்கான சுயக்கட்டுப்பாட்டையும் இவர்கள் கொண்டு இருப்பார்கள். 

சமீபத்திய புகைப்படம்

மகரத்தில் நுழையும் சுக்கிரன்! திருமண யோகம் கைக்கூடும் 6 ராசிகள்! இனி மஜாதான்!

Nov 28, 2024 07:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..நாளை நவ.29 உங்களுக்கு எப்படி இருக்கும்? - ராசிபலன்கள் இதோ!

Nov 28, 2024 04:23 PM

வெறிபிடித்து வரும் செவ்வாய்.. அள்ளி அள்ளி சுவைக்கும் ராசிகள்.. இனி பொட்டி பொட்டியாக வரும்!

Nov 28, 2024 04:06 PM

உதயத்தில் போட்டு சாத்த போகும் புதன்.. பணத்தில் பிச்சுகிட்டு பறக்க போகும் ராசிகள்.. இனி உச்சகட்ட சந்தோஷம் வரும்

Nov 28, 2024 04:02 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே..யாருக்கு லாபமான நாள்?..நாளை நவ.29 ராசிபலன்கள் இதோ..!

Nov 28, 2024 04:00 PM

சனி தாண்டவம்.. இனி தொட்டுப் பார்க்க முடியாத ராசிகள்.. முடிஞ்சா டச் பண்ணி பாருங்க தெரியும்!

Nov 28, 2024 12:45 PM

வாழ்கையில் முன்னேறத் தூண்டும் லட்சியம் 

நமது வாழ்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக உள்ளது. வாழ்கை என்பது ஒரு ஓட்டப்பந்தயம் போன்றது, ஆனால் அதில் வெற்றி பெற வேண்டும் என லட்சியம் பலருக்கும் உள்ளது. ஒருவரது ஜாதகத்தில் சாதகமான தசா புத்தி வரும் போது நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் நம்மை வெற்றியின் பாதையில் அழைத்து செல்லக்கூடியதாக இருக்கும். 

சனியும் செவ்வாயும்

மகரம் ராசிக்கு அதிபதியாக சனி பகவான் உள்ளார். மகரம் ராசிக்காரர்களை சனி பகவான் கெடுக்கமாட்டார். ஏழரை சனி காலத்தில் கூட ஆட்டிப்பார்பாரே தவிர கெடுக்கமாட்டார். மகரம் ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரத்திற்கு செவ்வாய் பகவான் அதிபதியாக உள்ளார். 4 மற்றும் 11ஆம் வீட்டுக்கு உடையவராக செவ்வாய் பகவான் உள்ளார். வீடு, மனை, வாகனம் ஆகிய செல்வங்களின் அதிபதியாகவும் செவ்வாய் பகவான் உள்ளார். 

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதலில் செவ்வாய் திசையும், அதன் பின்னர் 18 ஆண்டுகளுக்கு ராகு திசையும் இருக்கும். இந்த இளமை காலத்தில் கஷ்டப்பட்டாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள கூடிய உடல் வலிமை இருக்கும். 

ஏற்றி விடப்போகும் குரு, சனி, புதன்!

அதற்கு பிறகு குரு, சனி, புதன் ஆகிய தசைகள் வருகின்றது. மகரம் ராசிக்கு 35 முதல் 60 வயது வரை உள்ள சனி தசையும், அதற்கு பின்னர் வரும் புதன் தசையும் மிகப்பெரிய வளர்ச்சியை தரக்கூடும். 

வழிபாடுகள் 

குரு திசையை பொறுத்தவரை, நமது ஜாதகத்தில் குரு பகவான் பலம் பெற்று இருக்க வேண்டும். குரு மீது மரியாதை கொள்ளுதல் மிகப்பெரிய ஏற்றத்தை கொண்டு வரும். சனி பகவானுக்கு தனி சந்நிதிகள் உள்ள கோயிலுக்கு ஆண்டு தோறும் செல்லும் மகரம் ராசிக்காரர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகும். ஆண்டுக்கு ஒரு முறையாவது மலை பிரதேசங்களுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டு இருக்க வேண்டும். யானை என்பது குருவின் அம்சம் ஆகும். யானையின் ஆசிர்வாதத்தை வாங்கி வேண்டும். வெள்ளி ஆபரணங்களை மகரம் ராசிக்காரர்கள் அணிந்து கொள்வது ஏற்றத்தை கொடுக்கும்.  திருச்செந்தூர் முருகன், பெருமாளை வணங்கி வர வாழ்கையில் மேலும் சிறப்புகள் உண்டாகும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி