தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tyagaraja Swamigal: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர், கர்நாடக சங்கீத மேதை தியாகராஜ சுவாமிகள் பிறந்த தினம் இன்று

Tyagaraja Swamigal: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர், கர்நாடக சங்கீத மேதை தியாகராஜ சுவாமிகள் பிறந்த தினம் இன்று

Manigandan K T HT Tamil

May 04, 2024, 05:45 AM IST

google News
Tyagaraja Swamigal birthday: நுட்ப புத்தியும் ராம பக்தியும் கொண்ட தியாகராஜர் ஓய்வு நேரங்களில் சோந்தி வெங்கடராமையரிடம் சங்கீதம் பயின்று வந்தார். குருவின் அருளாலும் வழிநடத்தலாலும் சங்கீத சம்பிரதாயங்களில் மிக சிறந்த முறையில் இவர் கற்று தேறினார்.
Tyagaraja Swamigal birthday: நுட்ப புத்தியும் ராம பக்தியும் கொண்ட தியாகராஜர் ஓய்வு நேரங்களில் சோந்தி வெங்கடராமையரிடம் சங்கீதம் பயின்று வந்தார். குருவின் அருளாலும் வழிநடத்தலாலும் சங்கீத சம்பிரதாயங்களில் மிக சிறந்த முறையில் இவர் கற்று தேறினார்.

Tyagaraja Swamigal birthday: நுட்ப புத்தியும் ராம பக்தியும் கொண்ட தியாகராஜர் ஓய்வு நேரங்களில் சோந்தி வெங்கடராமையரிடம் சங்கீதம் பயின்று வந்தார். குருவின் அருளாலும் வழிநடத்தலாலும் சங்கீத சம்பிரதாயங்களில் மிக சிறந்த முறையில் இவர் கற்று தேறினார்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவர். தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய இவர் ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர்.

சமீபத்திய புகைப்படம்

சனி பகவானின் ஆட்டம் ஆரம்பம்.. பண மழையில் நனைய காத்திருக்கும் 3 ராசிகள் எது தெரியுமா.. ஜாக்பாட் உங்களுக்கா!

Dec 22, 2024 11:19 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இன்று டிச.22 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?

Dec 22, 2024 11:19 AM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.22 உங்கள் காதல் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்குமா?

Dec 22, 2024 10:58 AM

யாருக்கெல்லாம் முத்து அணிந்தால் செல்வம் பெருகும்.. யார் அணிய கூடாது தெரியுமா.. முத்து வாங்கும் முன் இத தெரிஞ்சுக்கோங்க!

Dec 22, 2024 10:35 AM

யாருங்க இந்த பாபா வங்கா.. என்னது 2025 ல் பொன்னாக ஜொலிக்க காத்திருக்கும் 5 ராசிகளை கணித்திருக்கிறாரா!

Dec 22, 2024 10:08 AM

‘செல்வம் தேடி வரும்.. நினைத்தது நடக்கும் யோகம் யாருக்கு பாருங்க’ மேஷம் முதல் மீனம் வரை இன்று எப்படி இருக்கும் பாருங்க

Dec 22, 2024 05:00 AM

18ஆம் நூற்றாண்டில் திருவாரூரில் ராம பக்தரான ராமபிரம்மம் என்பவருக்கும் சீதாம்மாவுக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார் தியாகராஜ சுவாமிகள்.

இவர் பிறந்த பின் இவரின் குடும்பத்தினர் தஞ்சாவூருக்கு அருகே உள்ள திருவையாறில் குடியேறினர்.

திருவையாறில் இவர் சமஸ்கிருத மொழியில் பயிற்சி பெற்றார். இவருக்கு 8 வது வயதிலேயே உபநயனம் நடைபெற்றது.

தியாகராஜ சுவாமிகள்

நுட்ப புத்தியும் ராம பக்தியும் கொண்ட தியாகராஜர் ஓய்வு நேரங்களில் சோந்தி வெங்கடராமையரிடம் சங்கீதம் பயின்று வந்தார். குருவின் அருளாலும் வழிநடத்தலாலும் சங்கீத சம்பிரதாயங்களில் மிக சிறந்த முறையில் இவர் கற்று தேறினார்.

ஒரே ராகத்தில் பல கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார். இவர் தெலுங்கில் பல கீர்த்தனைகளை அமைத்திருந்தார்.

இவருடைய இசைத் திறமையைக் கேள்வியுற்ற தஞ்சாவூர் மராத்திய அரசு மன்னரான சரபோஜி இவரைத் தமது அரசவைக்கு அழைத்து, தம்மைப் பற்றி புகழ் பாடச் செய்ய வேண்டுமென விரும்பினார். ஆனால் தியாகராஜர் அரசவைக்கு செல்ல மறுத்து நிதிசால சுகமா என்ற கல்யாணி இராகக் கிருதியைப் பாடினார். ராம பக்தியிலேயே அவர் தம் மனதைச் செலுத்தி வந்தமையால், மனிதர்களை துதி செய்து பொருள் சம்பாதிக்க ஆசைப்படவில்லை.

இவர் இயற்றிய கீர்த்தனைகள் தெலுங்கு மற்றும் வடமொழி தவிர வேறு மொழிகளில் அமையவில்லை.

வாழ்வில் நிகழந்த அற்புதங்கள்

இசை வாழ்வில் இவர் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் காஞ்சீபுரத்தில் இருந்து இராமகிருஷ்ண யதீந்திரர் என்னும் மகான் வந்து ராம நாமத்தை 96 கோடி முறை ஜெபிக்கும் படி தியாகராஜரிடம் கூறிச் சென்றார். இவர் அச்செயலை 21 ஆண்டுகளில் செய்து முடித்தார். சராசரியாக ஒரு நாளைக்கு 125,000 முறை ராமநாமத்தைச் செபித்து வந்தார். இதனால் பல தடவைகள் ராம தரிசனத்தைப் பெறும் பாக்கியம் இவருக்குக் கிடைத்தது.

நாரத பகவான் ஒரு சந்நியாசி வேடத்தில் இவருக்குத் தரிசனமளித்து ஸ்வரார்ணம் என்ற சங்கீதக் கிரந்தத்தை கொடுத்து விட்டுப் போனார். தமக்குக் கிடைத்த அந்தக் கிரந்தத்தை ஆதாரமாகக் கொண்டு தியாகராஜர் சங்கீத இலக்கணங்கள் அமைந்த பல கிருதிகளை இயற்றினார்.

இவர் பல தலங்களுக்கும் யாத்திரைகள் சென்று அங்கங்கே பல கீர்த்திகளை இயற்றி வந்தார். வழியில் ஒரு தடவை இவர் திருடர்களிடம் அகப்பட்டுக்கொள்ள நேரிட்ட போது, ராம லக்ஷ்மணர்களே சேவகர்கள் வடிவில் வந்து திருடர்களை விரட்டி விட்டார்கள். இது போன்ற பல அற்புத நிகழ்ச்சிகள் இவர் வாழ்வில் நிகழ்ந்துள்ளன.

வால்மீகி முனிவரே தியாகராஜராக அவதரித்தார் என்று கூறப்படுகின்றது. வால்மீகியானவர் 2400 சுலோகங்களில் ராமாயணத்தைச் செய்தார். இவர் 2400 கீர்த்தனைகளில் ராமாயணத்தை பாடியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

1847ஆம் ஆண்டில் தமது 80 ஆவது வயதில் தியாகராஜர் காலமானார்.

தியாகராஜ சுவாமிகளின் சமாதி திருவையாற்றில் காவேரி நதிக்கரையில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் அங்கு இசைக் கலைஞர்கள் கூடி இவருக்கு பஞ்சரத்னக் கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்துகின்றனர்.

தியாகராஜர் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு குறித்து தெலுங்கில் தியாகய்யா என்ற பெயரில் திரைப்படம் 1981ல் வெளிவந்துள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி