கம்பீரக் குரல்.. தமிழ் சினிமாவின் முதன்மை நாயகன்.. நடிகர், இசையமைப்பாளர் டி.ஆர். மகாலிங்கம் நினைவுநாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கம்பீரக் குரல்.. தமிழ் சினிமாவின் முதன்மை நாயகன்.. நடிகர், இசையமைப்பாளர் டி.ஆர். மகாலிங்கம் நினைவுநாள் இன்று!

கம்பீரக் குரல்.. தமிழ் சினிமாவின் முதன்மை நாயகன்.. நடிகர், இசையமைப்பாளர் டி.ஆர். மகாலிங்கம் நினைவுநாள் இன்று!

Divya Sekar HT Tamil
Apr 21, 2024 06:00 AM IST

T.R. Mahalingam Memorial Day : 'சின்னதுரை', 'விளையாட்டு பொம்மை' போன்றவற்றில் சகானா ராகத்தில் இடம்பெற்ற நிலவே நீதான் மற்றும் தீர்த்தக்கரையினிலே போன்ற பாடல்கள் இன்றளவும் டி.ஆர்.மகாலிங்கத்தின் பெருமை பேசுகின்றன.

 நடிகர், இசையமைப்பாளர் டி.ஆர். மகாலிங்கம் நினைவுநாள் இன்று
நடிகர், இசையமைப்பாளர் டி.ஆர். மகாலிங்கம் நினைவுநாள் இன்று

மகாலிங்கத்துடன் பிறந்தவர் ஆறு பேர். மற்ற ஐந்து பேரும் வேதம் படித்தவர்கள். நாடக நடிகர் ராமையாவின் உதவியுடன் ஜெகநாதர் ஐயரின் பிரபல வாய்ஸ் கம்பெனியின் பாலமோகன காந்த சபாவில் மகாலிங்கம் சேர்ந்தார்.

அப்பொழுது டி ஆர் மகாலிங்கத்தின் வயது 12. அதன் பிறகு எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நடத்திய வள்ளி திருமணத்தில் வேலனாக நடித்தார். அந்த காலகட்டத்திலேயே டி ஆர் மகாலிங்கம் பாடிய காயாத கானகத்தை பாடல் நாடகம் பார்ப்பவர்களிடையே பெரிய கைத்தட்டளை வாங்கி கொடுத்தது.

1935 ஆம் ஆண்டு மகாலிங்கம் கிருஷ்ண லீலாவில் கிருஷ்ணராக நடிக்கிறார். மகாலிங்கம் அபாரமாக பாடுகிறார் என்பது ஏ வி மெய்யப்ப செட்டியாருக்கு தெரிய வருகிறது. அந்த சமயம் ஏவி மெய்யப்ப செட்டியார் நந்தகுமார் என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார்.

கிருஷ்ண லீலா நாடகத்தை ஏவிஎம் பார்த்து டி ஆர் மகாலிங்கத்தின் நடிப்பு பிடித்து விடவே உடனே டி ஆர் மகாலிங்கத்தின் தந்தையை சந்தித்து மகனை நடிக்க வைக்க அனுமதி கேட்டு முதன் முதலாக 500 ரூபாய் முன் பணம் கொடுத்து தனது நந்தகுமார் படத்தில் முதன் முதலாக நடிக்க வைக்கிறார் ஏவிஎம்.

நந்தகுமார் படத்தை தொடர்ந்து டி ஆர் மகாலிங்கத்திற்கு பக்த பிரகலாதா, பூலோக ரம்பை, தாசி பெண், மனோன்மணி என பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்தது. ஆனால் இத்தனை படங்கள் வந்தாலும் இவருக்கு கிடைத்த கதாபாத்திரம் சிறு சிறு கதாபாத்திரங்களே.

1938 ஆம் ஆண்டு ஏவிஎம்-யின் ஸ்ரீ வள்ளி தயாரித்தபோது வள்ளியாக நடிக்க குமாரி ருக்மணியை ஒப்பந்தம் செய்தார். முருகனாக யாரை நடிக்க வைக்கலாம் என யோசிக்கும்போது டி ஆர் மகாலிங்கம் நினைவுக்கு வந்தார். சங்கீதத்தில் சாதனை புரிந்த எஸ் ஜி கிட்டப்பாவின் குரல் போலவே இருக்கு. இந்தப் பையனையே முருகனா நடிக்க வையுங்க என மெய்ய செட்டியாருக்கு சிலர் யோசனை சொன்னார்கள்.

அதன்படியே ஸ்ரீ வள்ளி படத்தில் வேலன், வேடன், விருத்தன் என மூன்று வேடங்களில் டி ஆர் மகாலிங்கம் நடித்தார்.இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று 55 வாரங்கள் வெற்றிகரமாக திரையில் ஓடியது. டி ஆர் மகாலிங்கத்தின் இயல்பான நடிப்பு, இன்றியமையாத இசை பாடல்களும் படத்தின் வெற்றிக்கு துணை புரிந்தது.

இதை எடுத்து டி ஆர் மகாலிங்கம் நடித்த அடுத்த வெற்றி படங்கள் நாம் இருவர், வேதாள உலகம் இந்த இரு படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தில் டி ஆர் மகாலிங்கம் பாரதியின் பாடலை கம்பீரமாக தனது குரலில் பாடி இருப்பார்.

டி ஆர் மகாலிங்கம் தனது 17 வயதில் கோமதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 1950 ஆம் ஆண்டு டி ஆர் மகாலிங்கத்திற்கு சொந்தமாக படம் எடுக்க ஆசை வந்தது. தனது ஒரே மகன் சுகுமாரின் பெயரிலேயே சுகுமார் ப்ரோடக்ஷன் என்ற கம்பெனியை தொடங்கி மச்ச ரேகை, மோகனசுந்தரம், சின்னத்துரை போன்ற படங்களை தயாரித்தார்.

டி ஆர் மகாலிங்கம் 40 படங்களில் நடித்து, நூற்றுக்கணக்கான பாடல்களை பாடினார். 1978 இல் உடல் நலக்குறைவால் 54 வயதில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி டி ஆர் மகாலிங்கம் காலமானார்.இன்று அவரின் நினைவு தினம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.