தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (17.08.2024): யாருக்கு நெருக்கடி?..மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan (17.08.2024): யாருக்கு நெருக்கடி?..மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil

Aug 17, 2024, 06:40 AM IST

google News
Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 17) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 17) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 17) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today RasiPalan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சமீபத்திய புகைப்படம்

விசாக நட்சத்திரம்.. சுக்கிரனின் அதிர்ஷ்டத்தில் குதிக்கும் 3 ராசிகள்.. பணத்தோடு விளையாட்டு ஆரம்பம்

Nov 16, 2024 03:10 PM

சனி 3 ராசிகள் உள்ளே கால் வைத்தார்.. சங்கடங்கள் தீரும்.. இனி இந்த ராசிகள்.. தொட முடியாது ராஜா!

Nov 16, 2024 03:00 PM

செவ்வாய் பட்டாபிஷேகம் தொடக்கம்.. தலைகளாக பிடித்து வாழும் ராசிகள்.. இனி உங்களுக்கு யோகம் ஓடி வருகிறது..!

Nov 16, 2024 02:27 PM

கடகம், சிம்மம், மீனம் ராசியினரே.. சனி பகவானின் கோபம் சுட்டெரிக்கும்.. எச்சரிக்கையா இருங்க!

Nov 16, 2024 01:19 PM

சனி சட்டென்று அடித்தார்.. பட்டென்று புகுந்த ராகு.. இனி இந்த ராசிகள்.. கவலை வேண்டாம்.. உச்சம் தொடுவது உறுதி!

Nov 16, 2024 10:21 AM

மிதுனத்தில் புகுந்து துலாமில் வெளிவரும் கேது.. 2 ராசிகள்.. இனி அசைக்க முடியாத பணமழை.. 2025 முதல் யோகம்

Nov 16, 2024 09:56 AM

மேஷம்

ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வாகன பயணங்களால் அனுகூலம் ஏற்படும். எதிர்பாராத சில பொறுப்புகள் மூலம் மதிப்பு அதிகரிக்கும்.கல்வி பணிகளில் மேன்மை ஏற்படும்.

ரிஷபம்

மறைமுக திறமைகள் வெளிப்படும். தாயிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சிறு தொழில் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தாமதங்கள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.

மிதுனம்

எந்த ஒரு செயலிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படவும். வரவுகளில் சில நெருக்கடிகள் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களால் அலைச்சல் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும்.

கடகம்

நண்பர்கள் உங்களது தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பார்கள். பேச்சுக்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். வெளி வட்டாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும். உடன்பிறப்புகள் மூலம் சாதகமான வாய்ப்புகள் அமையும்.

சிம்மம்

வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவமும், மதிப்பும் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்துவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கன்னி

வித்தியாசமான கற்பனைகள் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். எளிமையான சில பணிகளில் அலைச்சல் ஏற்படும். இணைய துறைகளில் மாற்றமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். புதிய நபர்களின் தன்மைகளை அறிந்து நட்புகளை வைத்துக் கொள்ளவும்.

துலாம்

விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். தடையாக இருந்துவந்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள். உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும்.

விருச்சிகம்

நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள்.

தனுசு

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவங்கள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு மேம்படும். வரவேண்டிய தனவரவுகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

மகரம்

மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பயண வாய்ப்புகள் மூலம் மனதில் சில மாற்றங்கள் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்கள் வட்டாரம் விரிவடையும். செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படும்.

கும்பம்

தம்பதிகளுக்குள் ஆரோக்கியமான வாதம் தோன்றி மறையும். வழக்கு தொடர்பான அலைச்சல் மேம்படும். பழைய நினைவுகள் மூலம் சோர்வு உண்டாகும். சஞ்சலத்தால் சில குழப்பம் ஏற்படும். பயணங்களில் பொறுமை வேண்டும்.

மீனம்

கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணம் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை