தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.08 யார் யாருக்கு எப்படி இருக்கும் பாருங்க..!

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.08 யார் யாருக்கு எப்படி இருக்கும் பாருங்க..!

Karthikeyan S HT Tamil

Dec 08, 2024, 05:07 AM IST

google News
ஜோதிட கணக்கீட்டின்படி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசியினருக்கு மாதத்தின் முதல் நாளான (டிச.08) இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
ஜோதிட கணக்கீட்டின்படி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசியினருக்கு மாதத்தின் முதல் நாளான (டிச.08) இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

ஜோதிட கணக்கீட்டின்படி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசியினருக்கு மாதத்தின் முதல் நாளான (டிச.08) இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரக விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, இன்று சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

சமீபத்திய புகைப்படம்

மாடி வீடு கட்டிக்கொடுக்கும் சனி.. 2025ஆம் ஆண்டு பணத்தை வாரிக் கொள்ளும் 3 ராசிகள்.. ஜாலி ஆட்டம்

Dec 18, 2024 05:58 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.19 உங்கள் கையில் அதிகம் பணம் சேருமா? - ராசிபலன் இதோ

Dec 18, 2024 03:09 PM

குரு சும்மா விடமாட்டார்.. இந்த 3 ராசிகள் கதி என்ன?.. வந்து பாருங்க அதிர்ஷ்டமா?.. கஷ்டமா?

Dec 18, 2024 02:56 PM

சனி 2025 சரமாரியாக அடிப்பார்.. நேரடி பயணத்தில் சிக்கிய ராசிகள்.. தாறுமாறாக அதிர்ஷ்டம் வரும்

Dec 18, 2024 02:49 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.19 எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும்? - ராசிபலன்!

Dec 18, 2024 02:45 PM

மேஷம் முதல் கன்னி வரை.. உங்க ராசிப்படி 2025 ஆம் ஆண்டில் எந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தெரியுமா?

Dec 18, 2024 12:52 PM

அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு இன்று (டிசம்பர் 08) வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே பணி நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும்.  திடீர் திருப்பங்கள் மூலம் மாற்றங்கள் உருவாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.  கவலை மறையும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே திட்டமிட்ட பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உருவாகும். தவறிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். எண்ணிய சில உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். நண்பர்கள் வழியில் வரவுகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே பழைய நினைவுகள் மூலம் ஒரு விதமான சோர்வுகள் தோன்றி மறையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலை அறிந்து விவேகத்துடன் செயல்படவும். தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். 

மீனம்

மீன ராசி அன்பர்களே இனம் புரியாத சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் ஒரு விதமான மந்தத் தன்மை உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் கைகூடும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில விஷயங்கள் தாமதமாகி நிறைவுபெறும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்ப்பு விலகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி