’தனுசு ராசிக்கு செல்லும் சூரியன்! மார்கழியில் மாஸ் காட்டப்போகும் 3 ராசிகள்!’ அடேங்கப்பா இவ்வளவு நன்மைகளா?
வரும் டிசம்பர் 15ஆம் தேதி அன்று விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சி ஆக உள்ளார். தனுசு ராசிக்கு உரிய கிரகமாக குரு பகவான் உள்ளார். சூரிய பகவானின் இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.
கிரகங்களின் ராஜா எனப்படும் சூரிய பகவான் மாதம் தோறும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்வது வழக்கம். வரும் டிசம்பர் 15ஆம் தேதி அன்று விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சி ஆக உள்ளார். தனுசு ராசிக்கு உரிய கிரகமாக குரு பகவான் உள்ளார். சூரிய பகவானின் இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.
தனுசு ராசியில் சூரியன் நுழைவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் மிகவும் சாதகமாக அமையும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். இந்த காலகட்டத்தில் பணவரவு அதிகரிக்கும். பதவி உயர்வும், வருமான உயர்வும் தேடி வரும். முடிவுறாத பணிகள் அனைத்து சிறப்பாக முடியும்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் சாதகமானதாக இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வருமான ஆதாரங்கள் உங்களை தேடி வரும். வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். இந்த காலகட்டத்தில், உங்கள் நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் மார்கழி மாதத்திற்கு பிறகு நன்மைகளை உண்டாக்கும். இந்த காலகட்டத்தில், தடைப்பட்டு இருந்த பண வரவுகள் சிறப்பாக கிடைக்கும். சூரிய பகவானின் அருளால் உங்கள் தொழிலும், வருமானமும் உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் நல்ல மாற்றங்களை உண்டாக்கித் தரும். நன்மைகளை உங்களை தேடி வரும். காலகட்டத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றிகள் கிடைக்கும். சூரிய பகவானின் அருளால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்