தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  February Rasi Palan: இந்த 3 ராசிகளின் நிலை என்ன?

February Rasi Palan: இந்த 3 ராசிகளின் நிலை என்ன?

Feb 01, 2023, 01:50 PM IST

பிப்ரவரி மாதத்தில் பலன் பெறப்போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
பிப்ரவரி மாதத்தில் பலன் பெறப்போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

பிப்ரவரி மாதத்தில் பலன் பெறப்போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

இந்த ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதத்தில் நவகிரகங்களின் பயணமானது சில ராசிகளுக்கு நன்மைகள் பெற்றுத் தரப் போகிறது. சில ராசிகளுக்குத் திருப்புமுனை ஆகவும் அமையப்போகிறது. சனிபகவானின் பயணம் சில ராசிகளுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும்.

சமீபத்திய புகைப்படம்

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

May 18, 2024 02:45 PM

சூரியனின் பண வெயிலில் காயப் போகும் ராசிகள்.. அக்னியாக கொட்டும் ராஜயோகம்.. வருகிறது அதிர்ஷ்டம்

May 18, 2024 02:06 PM

கண்ணில் கத்தி வீசப்போகும் செவ்வாய்.. கதறி கொட்டும் ராசிகள்.. சிக்கினால் சிதைவது உறுதி

May 18, 2024 10:43 AM

குருவின் ராட்சச படையல்.. டும் டும் டும் கொட்ட போகுது.. பணத்தில் கபடி விளையாட போகும் ராசிகள்

May 18, 2024 10:11 AM

கன்னா பின்னா பண மழை.. கதவை திறந்து வையுங்கள் பண மூட்டை கொட்ட போகுது.. ராஜ ராசிகள் நீங்களா?

May 18, 2024 10:04 AM

இடப்பெயர்ச்சி

  • சூரிய பகவான் மகர ராசியிலிருந்து 15 நாட்களுக்குக் கும்ப ராசியில் பயணம் செய்ய உள்ளார்.
  • சுக்கிர பகவான் கும்ப ராசியிலிருந்து 15 ஆம் தேதி மீன ராசியில் உச்சம் பெற்று பயணம் செய்கிறார்.
  • புதன் பகவான் மகர ராசியிலும் இந்த மாத கடைசியில் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
  • செவ்வாய் பகவான் இந்த மாதம் முழுவதும் ரிஷப ராசியில் பயணம் செய்கிறார்.

இதன் காரணமாக மகரம் கும்பம் மீனம் ராசிகள் பிறந்தவர்களுக்கு சில பலன்கள் கிடைக்கப் போகிறது அது என்ன என்பது குறித்து இங்கே காண்போம்.

மகர ராசி

இந்த பிப்ரவரி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு நிதி நெருக்கடிகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் அமைய உள்ளது. சூரிய பகவான் புதனுடன் இணைகிறார். சனிபகவான் இரண்டாம் வீட்டில் சுக்கிரனுடன் இணைகின்ற காரணத்தினால் பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. இந்த மாதத்தில் பிற்பகுதியில் சூரிய பகவான் இரண்டாம் வீட்டிற்கு வருகின்ற காரணத்தினால் குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையில்லாத முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. 

உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. பேசும்போது நிதானமாக இருக்க வேண்டும். சொத்துகள் வாங்கும் விற்கும் விஷயத்தில் எந்த சிக்கல்களும் இருக்காது. சனிக்கிழமைகளில் சிவபெருமான் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும்.

கும்ப ராசி

இந்த பிப்ரவரி மாதத்தில் குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களுக்குச் சனி பகவானின் ஜென்ம சனி நீடித்து இருப்பதால் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. இரண்டாம் வீட்டில் குருபகவான் பயணம் செய்வதால் நிதி நிலைமையில் எந்த சிக்கல்களும் இருக்காது. 

எதிர்பாராத நேரத்தில் பணவரவுகள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனைவியுடன் பேசும்போது வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். மகிழ்ச்சியான சூழ்நிலை இருந்தாலும் மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மீன ராசி

உங்களது ராசியில் சனிபகவான் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத நேரத்தில் செலவுகள் வரும். ஜென்ம குரு உங்களுக்குப் பணம் வரவை கொடுத்தாலும் செலவுகள் சுப காரியங்களுக்காக நடக்கும். அவ்வப்போது நெருக்கடிகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். 

கணவன் மனைவிக்கிடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது ஆனால் காலப்போக்கில் குறைந்து விடும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால் தேவையில்லாத செலவுகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். புதிதாகச் சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. ஏழரைச் சனியால் சங்கடங்கள் ஏற்படும். ஆனால் குரு பகவானால் மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டாகும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி