தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Theppa Thiruvizha: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முட்டுத்தள்ளுதல் வைபவம்!

Theppa Thiruvizha: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முட்டுத்தள்ளுதல் வைபவம்!

Feb 01, 2023, 11:56 AM IST

மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நாளை நடக்க உள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நாளை நடக்க உள்ளது.

மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நாளை நடக்க உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முட்டுத்தள்ளுதல் வைபவம்!

சமீபத்திய புகைப்படம்

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

May 18, 2024 02:45 PM

சூரியனின் பண வெயிலில் காயப் போகும் ராசிகள்.. அக்னியாக கொட்டும் ராஜயோகம்.. வருகிறது அதிர்ஷ்டம்

May 18, 2024 02:06 PM

கண்ணில் கத்தி வீசப்போகும் செவ்வாய்.. கதறி கொட்டும் ராசிகள்.. சிக்கினால் சிதைவது உறுதி

May 18, 2024 10:43 AM

குருவின் ராட்சச படையல்.. டும் டும் டும் கொட்ட போகுது.. பணத்தில் கபடி விளையாட போகும் ராசிகள்

May 18, 2024 10:11 AM

கன்னா பின்னா பண மழை.. கதவை திறந்து வையுங்கள் பண மூட்டை கொட்ட போகுது.. ராஜ ராசிகள் நீங்களா?

May 18, 2024 10:04 AM

மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நாளை நடக்க உள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் எல்லா மாதங்களும் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அது மிகவும் சிறப்பு வாய்ந்தது இந்த தை மாத தெப்பத் திருவிழாவாகும். ஜனவரி மாதம் 24 ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழா. இந்த சிறப்பு மிகுந்த நாளில் சுவாமியும் அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

இந்த திருவிழாவின் போது சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் நடைபெறுவது வழக்கம். அதில் வலைவீசி அருள்பாலித்த லீலைகள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நாளில் பெரியார் பேருந்து நிலையம் அருகே எல்லீஸ் நகர் பாலத்திற்குக் கீழே உள்ள தெப்பக்குளத்திற்குச் செல்வது வழக்கம்.

ஆனால் இரண்டு ஆண்டுகள் கொரோனா கட்டுப்பாடு காரணமாகச் சுவாமி அங்குச் செல்லவில்லை. தற்போது இரண்டு ஆண்டுகள் கடந்து பழைய திருக்கல்யாண மண்டபத்தில் வலை வீசு அருளிய திருவிளையாடல் லீலை நடைபெற்றது. அப்போது இரண்டு வெள்ளி மீன்களை வலை வீசு பிடிப்பது போன்று பிடித்து அதனைத் தாம்பூலத்தில் வைத்து சுந்தரேஸ்வரர் சுவாமிக்குச் சமர்ப்பித்தனர்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த தைத் தெப்பத் திருவிழாவானது வரும் நான்காம் தேதி நடைபெற உள்ளது. இதற்காகக் காமராஜர் சாலை மாரியம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள தெப்பக்குளத்தில் தெப்பம் கட்டும் பணி மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.

இதன் முன்னோட்டமாகத் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்ச்சி நாளை மாலை 5 மணிக்கு அங்கு நடைபெற உள்ளது. ஒரு நான்காம் தேதி அன்று சுந்தரேஸ்வரர் சுவாமியும், மீனாட்சி அம்மனும் அதிகாலை கோயிலிலிருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட கோலத்துடன் தெப்பக்குளத்தில் எழுந்தருள்வார்கள்.

காலை நேரத்தில் இரண்டு முறையும் இரவு நேரத்தில் ஒரு முறையும் இருவரும் வெப்பத்தை வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். இதற்கான முன்னேற்பாடுகள் பணி தற்போது கோயில் நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி