கன்னிக்கு கொட்டும் லாபம்! ஆடம்பர வாழ்கை காத்து இருக்கிறது! சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!
Nov 12, 2024, 06:00 AM IST
கன்னி ராசிக்கு 2 மற்றும் 9ஆம் இடங்களுக்கு அதிபதியான சுக்கிர பகவான் தற்போது 4ஆம் இடம் என்று சொல்லக்கூடிய சுக ஸ்தானத்திற்கு இடம்பெயர்ந்து உள்ளார். 4ஆம் இடத்தில் இருந்து 10ஆம் இடம் எனப்படும் ஜீவன ஸ்தானத்தை சுக்கிரன் பார்பதால் தொழில் விருத்தி உண்டாகும்.
நவகிரகங்களில் அசுர குரு எனப்படும் சுக்கிர பகவானுக்கு தனி இடம் உண்டு. பொருள் சேர்க்கை, திருமணம், மகிழ்ச்சி, கலை, திறமை, அழகு, காதல், காமம், ஆடைகள், அலங்காரம், ஆபரணங்கள் ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகமாக சுக்கிரன் உள்ளார். ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கம் மாறுவது அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.
சமீபத்திய புகைப்படம்
பரிவர்தனை யோகம்
விருச்சிகம் ராசியில் இருந்த சுக்கிர பகவான் நவம்பர் 8ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3 வரையிலான 26 தனுசு ராசியில் வாசம் செய்ய உள்ளார். சுக்கிரன் அதிபதியாக உள்ள ரிஷபம் ராசியில் குரு பகவானும், குரு பகவான் அதிபதியாக உள்ள தனுசு ராசியில் சுக்கிர பகவானும் அமர்ந்து பரிவர்தனை யோகத்தை உண்டாக்கி உள்ளனர். இந்த யோகம் ஆட்சிக்கு இணையான பலன்களை கொடுக்கும் என்பது ஜோதிட விதியாக உள்ளது.
கன்னியும் சுக்கிரனும்
கன்னி ராசிக்கு 2 மற்றும் 9ஆம் இடங்களுக்கு அதிபதியான சுக்கிர பகவான் தற்போது 4ஆம் இடம் என்று சொல்லக்கூடிய சுக ஸ்தானத்திற்கு இடம்பெயர்ந்து உள்ளார். 4ஆம் இடத்தில் இருந்து 10ஆம் இடம் எனப்படும் ஜீவன ஸ்தானத்தை சுக்கிரன் பார்பதால் தொழில் விருத்தி உண்டாகும். தேக்கம் அடைந்த தொழில்கள் மீண்டும் துளிர்க்கும். புதிய தொழில் புரிவோருக்கு லாபம் கிடைக்கும். பணியிடங்களில் உங்களுக்கு செல்வாக்கு உண்டாகும்.
ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பீர்கள்
பூராடம் நட்சத்திரத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றால் தொழில் சார்ந்த பாக்கியங்கள் பெருகும். பணிகளில் இருந்து வந்த தடைகள் விலகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பரிவர்தனை யோகம் காரணமாக பாக்கிய நன்மைகள் தேடி வரும். சுக ஸ்தானம் வலுப்பதால் வண்டி வாகன சேர்க்கை உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
இடமாற்றத்தால் யோகம் உண்டாகும்
வீடு மாற்றம், தொழில் மாற்றம், இட மாற்றம், மனை மாற்றம் மூலம் நன்மைகள் பிறக்கும். உபத் தொழிகள் மூலம் கூடுதல் வருமானம் உண்டாகும். வேலைகளில் உயர் அதிகாரிகள் உடன் இருந்த சிக்கல் தீரும். அரசு மற்றும் அரசாங்கத் தொடர்புகள் உண்டாகும், பொன், ஆடை, ஆபரண சேர்க்கை கிடைக்கும். ஜவுளி, நகைத் தொழில்களில் உள்ளவர்களுக்கு லாபம் பெருகும் காலம். பங்குச்சந்தை முதலீடுகள் வீழ்ச்சியை சந்தித்து ஏற்றம் காணும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் மகிழ்ச்சி தரும். கல்வி சார்ந்த தடைகள் நீங்கும். வாழ்கை துணையின் உடல்நிலையில் கவனம் தேவை. கும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.