’வருண பகவான் பிறந்த பூராடம் நட்சத்திரம்!’ பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்!

By Kathiravan V
May 05, 2024

Hindustan Times
Tamil

சுக்கிரனுக்குரிய நட்சத்திரமான பூராடம், குரு பகவானின் தனுசு ராசியில் முழு நட்சத்திரமாக உள்ளது.

அதாவது அசுர குருவின் நட்சத்திரம் தேவ குருவின் ராசியில் இருப்பது பூராடம் நட்சத்திரத்தின் சிறப்பாகும். 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் மீது அன்பு அதிகமாக இருக்கும். தேவ குருவின் வீட்டில் அசுர குரு இருப்பதால், சிலர் வீம்புக்கு வாதம் செய்வார்கள். 

 இவர்கள் எப்போதும் லவுகீக சுகங்களை நன்றாக அனுபவித்துக் கொண்டே ஆன்மீகம் நோக்கி பயணிப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிற்றுண்டி பிரியர்களாக இருப்பார்கள். சூடான உணவை சுவைப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும். 

பொய் சொல்ல தயங்கும் இவர்களால் உண்மையை தயக்கமின்றி கூறுவார்கள். வாசனை திரவியங்கள் மீதும், கலைகள் மீதும் அதிக நாட்டம் இருக்கும். 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் பலர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். 

தினமும் நூடுல்ஸ் சாப்பிடலாமா?