தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kal Garuda Sevai: பிரசித்தி பெற்ற கல்கருட சேவை!

Kal Garuda Sevai: பிரசித்தி பெற்ற கல்கருட சேவை!

Apr 03, 2023, 10:15 AM IST

google News
சீனிவாச பெருமாள் கோயிலில் கல்கருட சேவை வெகு விமர்சையாக நடைபெற்றது.
சீனிவாச பெருமாள் கோயிலில் கல்கருட சேவை வெகு விமர்சையாக நடைபெற்றது.

சீனிவாச பெருமாள் கோயிலில் கல்கருட சேவை வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோயில் நகரங்களில் பிரசித்தி பெற்ற நகரமாக கும்பகோணம் விளங்கி வருகிறது. கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் பிரசித்தி பெற்ற சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலானது 108 வைணவ தளங்களில் ஒன்றாகும்.

சமீபத்திய புகைப்படம்

புத்தாண்டில் லாப மழையில் நனைய காத்திருக்கும் ராசியா நீங்கள்.. ராகு பகவான் அதிர்ஷ்டத்தை கொட்டி கொடுக்க காத்திருக்கிறார்!

Dec 16, 2024 09:05 AM

'நினைத்தது நடக்கும்.. நிம்மதி கிடைக்கும்.. நிக்காம போய்கிட்டே இருங்க' மேஷம் முதல் மீனம் வரையான இன்றைய ராசிபலன் இதோ!

Dec 16, 2024 05:00 AM

2025இல் கோடீஸ்வரர் ஆகும் யோகம் பெறும் ராசிகள்.. கொரோனா பாதிப்பை சரியாக கணித்த நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு என்ன சொல்கிறது?

Dec 15, 2024 08:40 PM

’உங்கள் முன் ஜென்மத்தை சொல்லும் 5ஆம் இட ரகசியங்கள்' ஜோதிடம் சொல்லும் கட்டத்தை அறிவோம்!

Dec 15, 2024 06:02 PM

ஓவராக யோசிக்கும் ராசிகள்! இந்த ராசிகளில் பிறந்தவர்கள் அதிகம் யோசிப்பார்கள்! யார் தெரியுமா?

Dec 15, 2024 12:40 PM

தனுசுக்கு செல்லும் சூரியன்.. துலாம் முதல் மீனம் வரை.. எந்த ராசிக்கு இந்த வாரம் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்!

Dec 15, 2024 12:25 PM

இந்த கோயிலில் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் ஒரே கல்லில் செய்யப்பட்ட கல் கருடன் தான். இது மிகவும் விஷேசமாக போற்றப்படுகிறது. பங்குனி மாத திருவிழாவானது ஆண்டுதோறும் 11 நாட்களுக்கு வெகு விமர்சையாக இந்த கோயிலில் நடைபெறும்.

கடந்த மார்ச் 29ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் இந்த பங்குனி திருவிழா தொடங்கியது. இந்த கோயிலில் தற்போது குடமுளுக்கு திருப்பணிக்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா பிரகாரத்தில் நடைபெறுகிறது.

இந்த கோயிலின் முக்கிய நிகழ்ச்சியான பிரசித்தி பெற்ற கல்கருட சேவை நேற்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அதேபோல் நேற்று கோயிலில் ஏராளமான பக்தர்கள் கல்கருடனை தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர்.

இந்தக் கல் கருடனின் முக்கிய சிறப்பு என்னவென்றால், பிரகாரத்தில் இருந்து தூக்கும் பொழுது உச்சகட்ட சுமையாக இருக்கும். பிரகாரத்தை விட்டு வெளியே வர வர அந்த கல் கருடனின் சுமையானதும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். பின்னர் வளம் வந்துவிட்டு பிரகாரத்தை அடையும் நேரத்தில் சுமை தானாக அதிகரிக்கும். இது தற்போது வரை மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

கல் கருட பகவான் வாகன மண்டபத்தில் எழுந்தருளும் போது பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தி வருவது போல இருந்தது. நேற்று இரவு கல் கருட பகவானுக்கு அலங்கார தரிசனம் நடைபெற்றது. வரும் ஏப்ரல் ஆறாம் தேதி என்று உற்சவர் பெருமாள் மற்றும் தாயார் கோரதத்தில் பிரகாரத்தில் உலா வர உள்ளனர். தற்போது இந்த விழாவின் ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி