Sani Peyarchi 2025: விரைவில் சனி பெயர்ச்சி! தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்கு என்ன நடக்கும்? சனி பெயர்ச்சி பலன்கள்
Oct 02, 2024, 09:00 PM IST
Sani Peyarchi 2025: கணக்கை தீர்ப்பதற்கான கிரகமாக சனி பகவான் உள்ளார். 12ஆம் வீடான மீனம் ராசிக்கு சனி பகவான் செல்வதான் மூலம் 12 வீடுகளையும் 30 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக சுற்றி முடிக்க உள்ளார். அதன் பின்னர் மேஷம் ராசியில் அவர் நுழையும் போது நீசம் பெற்று விடுவார்.
சனி பகவான் ஆனவர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி அன்று கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஏற்கெனவே மீனம் ராசியில் இருக்கும் ராகு பகவான் உடன் சனியின் சேர்க்கை ஏற்படும் போது மிகப்பெரிய தாக்கம் உண்டாகும்.
சமீபத்திய புகைப்படம்
கணக்கை தீர்ப்பதற்கான கிரகமாக சனி பகவான் உள்ளார். 12ஆம் வீடான மீனம் ராசிக்கு சனி பகவான் செல்வதான் மூலம் 12 வீடுகளையும் 30 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக சுற்றி முடிக்க உள்ளார். அதன் பின்னர் மேஷம் ராசியில் அவர் நுழையும் போது நீசம் பெற்று விடுவார். சனி பகவான் மீனம் ராசியில் பிரவேசம் செய்யும் காலத்தில் எதிர்திசையில் வரும் ராகுவை கடக்க வேண்டும். ராகு சனியின் வீட்டுக்கும், சனி பகவான் குருவின் வீட்டுக்கும் செல்வார்கள்.
குரு பகவானின் வீட்டிற்கு செல்லும் சனி பகவான் அமைதியான நிலையில் செயல்படுவார். மார்ச் மாதம் 16 முதல் மே மாதம் 23 ஆம் தேதி வரை சனி மற்றும் ராகு பகவானின் சேர்க்கை இருக்கும். இருவரும் 3 டிகிரிக்குள் இணையும் போது ராகு பகவான் சனி பகவானாகவே செயல்படுவார்.
பேராசையை கொடுக்கும் கிரகமாக ராகு உள்ளார். எது கொடுத்தாலும் போதாது என்ற நிலையை ராகு பகவான் உருவாக்குவார். ருணம், ரோகம், சத்ரு, மந்தம் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும் கிரகமாக சனி பகவான் உள்ளார்.
தனுசு
தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனி சனி ஆரம்பம் ஆகிறது. நான்காம் வீட்டிற்கு செல்லக்கூடிய சனி பகவான் உங்கள் செயல்பாடுகளில் தடைகளை ஏற்படுத்துவார். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. வாகனம் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். வீடு, வாகனம் மனை வாங்குவதில் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். தொழில் சம்பந்தமான விஷயங்களில் இடர்பாடுகள் ஏற்படும். சகோதரர்களிடம் சுமூகமான உறவை கடைப்பிடிக்க வேண்டும்.
மகரம்
மகரம் ராசிக்கு ஏழரை சனி முழுமையாக விலகுகின்றது. திருவோணம் மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் மிகுந்த சிக்கல்களை சந்தித்து இருக்கலாம். பலருக்கு வம்பு, வழக்கு, அவமானம், தோல்வி ஆகியவை ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் இந்த பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு உண்டாகும். ஆனால் சனி பகவான் ராகு உடன் சேரும் போது தொண்டை சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம். மூன்றாம் இட சனி மகரம் ராசிக்கு பல வெற்றிகளை கொடுக்கும். வெளிநாடு முயற்சிகள், வியாபாரம் சார்ந்த விஷயங்களில் அபிவிருத்தி உண்டாகும். அடுத்த 27 ஆண்டுகளுக்கு ஏழரை சனி பாதிப்பு இல்லை.
கும்பம்
கும்ப ராசிக்கு ஜென்ம சனி விலகி பாத சனி தொடங்குகின்றது. கடந்த காலங்களில் அனுபவித்து வந்த கஷ்டங்கள் குறையும். கணவன் - மனைவி வார்த்தை பரிமாற்றங்களில் கவனம் தேவை. வார்த்தைகளை பேசும் போது கவனம் தேவை. உங்கள் வார்த்தைகள் மற்றவர்களை காயப்படுத்த கூடாது. குழந்தைகளுக்கு சுபகாரியங்கள் சற்று தாமதமாக நடைபெறலாம். தொழிலில் லாபம் உண்டாகும்.
மீனம்
மீன ராசிக்கு ஜென்ம ராசியில் சனி பகவான் வருகிறார். இவர்களுக்கு விரையத்தை கொடுக்கும் சனி பகவான் லாபத்தை கொடுப்பார். புதிய முயற்சிகள், புதிய கடன்களை வாங்க வேண்டாம். அதனால் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. புதிய முதலீடுகளில் மிக கவனமாக இருக்க வேண்டும், முறையான ஆலோசனை மற்றும் தெளிவு இல்லாமல் முதலீடுகளை செய்யக்கூடாது. திருமண வரன்களை பார்க்கும் போது கவனமாக இருக்க வேண்டும். புதிய நபர்களிடம் மிக கவனமாக இருக்க வேண்டும். நிலம் வாங்கும் போது கவனம் தேவை, சிலர் வம்பு, வழக்குகளில் சிக்கி உள்ள சொத்துக்களை வாங்கி சிக்கல்களை சந்திக்கலாம்.
பரிகாரம்
மாற்றுத் திறனாளிகள், தூய்மை பணியாளர்களுக்கு உதவுகள். உடலில் இருந்து வியர்வை வெளியேறும் அளவுக்கு உடற்பயிற்சி செய்யுங்கள். திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபடுங்கள், சனிக்கிழமைகளில் நரசிம்மர், ஆஞ்சநேயர் வழிபாடு செய்யுங்கள். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுங்கள். விஷ்ணு சகஸ்ரநாமத்தை கேளுங்கள். அஷ்டமி திதிகளில் பைரவரை வழிபாடு செய்யுங்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.