Thiruthani Murugan : ரூ. 1.2 கோடி காணிக்கை-திருத்தணி கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
Feb 28, 2023, 09:58 AM IST
திருத்தணி முருகன் கோயிலில் 20 நாட்களில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 16 ஆயிரத்து 521 ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆந்திர மாநில எல்லை அருகே அமைந்துள்து முருகபெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி. முருகன் கோயில்களில் தைப்பூசம், கிருத்திருகை போன்ற நாட்களில் விஷேச வழிபாடு நடைபெறும்.
சமீபத்திய புகைப்படம்
அதன்படி திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 20 நாட்களாக பல்வேறு விழாக்கள் நடைபெற்றது. மாசி மாதம் வரும் கிருத்திகை தினம் முருகனுக்கு உகந்த தினமாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாசி மாதம் கிருத்திகை தினம் கொண்டாடப்பட்டது. இந்த மாசி கிருத்திகை ஞாயிற்றுக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் முருகனுக்கு அமைந்துள்ள அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல், எல்லை பகுதியில் அமைந்திருப்பதால் ஆந்திரா, கர்நாடகா உள்பட பிற மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர்.
திருத்தணி மலைக்கோயில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஏராளமான பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்துவது வழக்கம். அதன்படி திருத்தணி முருகன் கோயில், உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தினர்.
அதனை திருத்தணி முருகன் கோயில் துணை ஆணையர் விஜயா தலைமையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திருக்கோயில் தற்காலிக பணியாளர்கள், ஆகியோர்களை கொண்டு மலை கோயிலில் உள்ள மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
அதன்படி, ஒரு கோடியே 2 லட்சத்து 16 ஆயிரத்து 521 ரூபாயும், 612 கிராம் தங்கமும், 10,487 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக பக்தர்கள் உண்டியலில் செலுத்தி உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்