தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கணவனை இழந்த பாப்பாத்தி.. சிவபெருமான் மீது தீவிர பக்தி.. காட்சி கொடுத்த நாகேஸ்வரர்

கணவனை இழந்த பாப்பாத்தி.. சிவபெருமான் மீது தீவிர பக்தி.. காட்சி கொடுத்த நாகேஸ்வரர்

Oct 24, 2024, 06:00 AM IST

google News
Nageswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் நாகேஸ்வரர் எனவும் தாயார் சிவகாமி அம்பிகை எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றன.
Nageswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் நாகேஸ்வரர் எனவும் தாயார் சிவகாமி அம்பிகை எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றன.

Nageswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் நாகேஸ்வரர் எனவும் தாயார் சிவகாமி அம்பிகை எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றன.

Nageswarar: உலகம் முழுவதும் மிகப் பெரிய பக்தர்கள் கூட்டத்தை சிவபெருமான் தன்வசம் வைத்திருக்கிறார். உலகம் முழுவதும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அன்று தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது.

சமீபத்திய புகைப்படம்

மகரம் ராசிக்குள் நுழையும் சுக்கிரன்! இனி எல்லாமே மாறுது! காதல்! காமம்! பணத்தில் திளைக்க போகும் 5 ராசிகள்!

Nov 22, 2024 04:59 PM

சனி நேரான பாதை.. 30 ஆண்டுகள் கனவு.. இந்த ராசிகள் சூப்பரோ சூப்பர்.. தொட்டுப் பாருங்க தெரியும்!

Nov 22, 2024 04:55 PM

கேது பெயர்ச்சி.. 2025 முதல் இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. ஜாக்பாட் ராசிகள் நீங்கதான்

Nov 22, 2024 11:41 AM

குரு கொடூர யோகத்தை கொட்டுகிறார்.. சுக்கிரன் தாங்கி பிடித்து தாலாட்டும் ராசிகள்.. இனி பணத்தால் மெத்தை உருவாகும்

Nov 22, 2024 10:07 AM

உடுக்கை அடிக்க போகும் புதன்.. ஐயோ அம்மா என்று கதறப்போகும் ராசிகள்.. துரத்தி துரத்தி அடிப்பார்

Nov 22, 2024 10:01 AM

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை.. லட்சுமி தேவி இந்த மூன்று ராசிக்கு கருணை காட்டுவார்.. 2025 ஜாக்பாட் அடிக்க போகுது!

Nov 22, 2024 09:30 AM

மண்ணுக்காக மன்னர்கள் ஒரு பக்கம் போரிட்டு வந்தாலும் சிவபெருமான் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய கோயில்களை மன்னர்கள் கட்டி வைத்து சென்றனர். அந்த கோயில்கள் இன்று வரை காலத்தால் அழிக்க முடியாத சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது.

அந்த காலத்தில் மன்னர்கள் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். சில கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் அந்த கோயில்களின் கலைநயம் தொல்லியல் துறையில் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி வருகிறது.

மனித உயிரினம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் நின்று வருகின்றன.

அந்த வரிசையில் இருக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் நாகேஸ்வரர் எனவும் தாயார் சிவகாமி அம்பிகை எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றன.

தல சிறப்பு

எங்க வீட்டில் இருக்கக்கூடிய சிவபெருமானை வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நாக தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதேசமயம் திருமண வாழ்க்கையில் சிக்கல்கள், குடும்ப சிக்கல்கள் உள்ளிட்ட அவைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும் எனக் கூறப்படுகிறது.

மார்கழி திருவாதிரை, ஐப்பசி மாத அன்னாபிஷேகம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாசி மாதத்தில் நிகழக்கூடிய மகா சிவராத்திரி திருநாள் அன்று கொடுக்கப்படும் பிரசாதத்தை திருமணம் ஆன பெண்கள் வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது. சுற்றி உள்ள ஊர்களில் இருந்து பல மக்கள் இங்கு வந்து திருவிழா காலங்களில் வழிபட்டு செல்கின்றனர்.

தல வரலாறு

பாப்பாத்தி என்ற பெண்மணி ஒருவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கே வாழ்ந்து வந்துள்ளார். இவர் கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்ட பாப்பாத்தி சிவ நாமத்தை உச்சரிப்பதையே தனது வேலையாக செய்து வந்துள்ளார்.

தினமும் சிவபெருமான் கோயிலுக்கு சென்று சிவ தரிசனம் செய்வதை காப்பாற்றி வழக்கமாக வைத்து வந்துள்ளார். இவரது பக்தியை கண்டு சிவபெருமான் மகிழ்ந்துள்ளார். ஒருநாள் சிவபெருமான் பாப்பாத்திக்கு திருக்காட்சி கொடுத்து அருளியுள்ளார்.

அப்படி சிவபெருமான் காட்சி கொடுத்த இடம்தான் தற்போது கோயில் இருக்கும் இடமாகும். ஒருமுறை பாப்பாத்திக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த திருநாளில் நாகம் ஒன்று சன்னதியில் இருந்து வெளியே வந்து மீண்டும் சன்னதிக்கு சென்று லிங்கத் திருமேனியாக வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் மீது சுற்றிக்கொண்டு காட்சி கொடுத்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்குப் பிறகு உங்க வீட்டில் இருக்கக்கூடிய சிவபெருமானுக்கு ஸ்ரீ நாகேஸ்வரர் என்ற திருநாமம் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை