Nageswarar: மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான்.. காட்சி கொடுத்த நாகேஸ்வரர்.. உள்ளே புகுந்த நாகம்-you can know about the history of namakkal periyamanali arulmigu nageswarar temple here - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Nageswarar: மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான்.. காட்சி கொடுத்த நாகேஸ்வரர்.. உள்ளே புகுந்த நாகம்

Nageswarar: மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான்.. காட்சி கொடுத்த நாகேஸ்வரர்.. உள்ளே புகுந்த நாகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 18, 2024 05:55 AM IST

Nageswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நாகேஸ்வரர் எனவும், தாயார் சிவகாமி அம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகின்றனர்.

Nageswarar: மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான்.. காட்சி கொடுத்த நாகேஸ்வரர்.. உள்ளே புகுந்த நாகம்
Nageswarar: மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான்.. காட்சி கொடுத்த நாகேஸ்வரர்.. உள்ளே புகுந்த நாகம்

உயிரினங்கள் உருவான காலத்தில் இருந்து இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் குறைந்தபாடில்லை. எங்கும் நிறைந்திருக்கும் இறைவனாக சிவபெருமான் திகழ்ந்த வருகின்றார். மண்ணுக்காக மன்னர்கள் போரிட்ட காலத்திலும் அனைத்து மன்னர்களும் சிவபெருமானை குலதெய்வமாக நினைத்து வணங்கி வந்துள்ளனர்.

ஒருபுறம் போர் செய்து கொண்டிருந்தாலும் மறுபுறம் கோயில் கட்டு தங்களது பக்தியை வெளிக்காட்டுவதற்காகவே மன்னர்கள் பாடுபட்டு வந்துள்ளனர். அனைத்து கோயில்களிலும் நாயகனாக அமர்ந்திருக்க கூடியவர் சிவபெருமான்தான்.

சோழர்களின் சாம்ராஜ்யமாக விளங்கக்கூடிய தஞ்சை பெருநகரத்தில் மன்னர்களுக்கெல்லாம் மன்னராக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நின்று வருகின்றன. ஒருபுறம் பாண்டிய மன்னர்கள் தங்கள் பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே கலைநயத்தோடு மிகப்பெரிய கோயில்களைக் கட்டிச் சென்றுள்ளன.

சில கோயில்கள் இன்று வரை எந்த ஆண்டில் கட்டப்பட்டது என்பது கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக பல கோயில்கள் தமிழ்நாட்டில் சிறப்போடு விளங்கி வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நாகேஸ்வரர் எனவும், தாயார் சிவகாமி அம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகின்றனர்.

தல சிறப்பு

இந்த திருக்கோயிலில் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் மற்றும் மார்கழி மாதத்தில் திருவாதிரை போன்ற விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட வருகின்றது. மாசி மாதத்தில் வரக்கூடிய மகா சிவராத்திரி திருநாள் மிகவும் சிறப்பாக இங்கு கொண்டாடப்படும்.

அன்னாபிஷேக திருநாளில் கடவுளுக்கு படைக்கப்படும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்த வருகிறது.

இந்த சிவபெருமானை தரிசனம் செய்வதற்காகவே சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். அனைத்து விதமான முன்னேற்றத்தையும் நாகேஸ்வரர் கொடுப்பார் என பக்தர்கள் நம்பிக்கை கூறுகின்றனர்.

தல வரலாறு

பாப்பாத்தி என்ற பக்தை ஒருவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கு வசித்து வந்துள்ளார். கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்த பாப்பாத்தி தீவிர சிவபெருமானின் பக்தராக திகழ்ந்து வந்துள்ளார். தினமும் கோயிலுக்குச் சென்று சிவபெருமானை தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளார்.

இந்த பக்தியை கண்டு சிவபெருமான் பெருமகிழ்ச்சி அடைந்து ஒரு நாள் அவருக்கு காட்சி கொடுத்துள்ளார். இதுவே இந்த கோயிலின் தல வரலாறாகத் திகழ்ந்து வருகிறது. சிவபெருமான் தனது பக்தருக்கு காட்சி கொடுத்த போது நாகம் ஒன்று அந்த சன்னதியில் இருக்கக்கூடிய லிங்கத் திருமேனியிலிருந்து வெளியே வந்து மீண்டும் சன்னதிக்குள்ளே திரும்பிச் சென்றுள்ளது. பிறகு அந்த லிங்க திருமேனியை சுற்றி அந்த திருநாகம் காட்சி கொடுத்துள்ளது. அதன் காரணமாகவே இந்த கோயிலில் இருக்கக்கூடிய இறைவனுக்கு அருள்மிகு நாகேஸ்வரர் இன்று திருநாமம் வைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

தொடர்புடையை செய்திகள்