தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Karthigai Deepam 2022: தீபத்திருநாளன்று விளக்கேற்றும் வழிமுறைகள்!

Karthigai Deepam 2022: தீபத்திருநாளன்று விளக்கேற்றும் வழிமுறைகள்!

Dec 06, 2022, 02:59 PM IST

கார்த்திகை தீபத்திருநாள் அன்று விளக்கேற்றும் முறைகள் குறித்து இங்கே காண்போம்.
கார்த்திகை தீபத்திருநாள் அன்று விளக்கேற்றும் முறைகள் குறித்து இங்கே காண்போம்.

கார்த்திகை தீபத்திருநாள் அன்று விளக்கேற்றும் முறைகள் குறித்து இங்கே காண்போம்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகா தீபத் திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. கார்த்திக் தீபத்திருநாளான இன்று அனைவரது வீட்டிலும் விளக்கு ஏற்று வழிபடுவார்கள். அவ்வாறு விளக்கு ஏற்றி வழிபடுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அந்த முறைகள் குறித்து இங்கே காண்போம்.

சமீபத்திய புகைப்படம்

Pradhosa Fasting : பிரச்னைகளை தீர்க்கும் பிரதோஷ விரதம்! கணவன் - மனைவி இடையே இணக்கத்தை உருவாக்கும்! எப்படி இருப்பது?

May 04, 2024 05:42 PM

Hastham Nakshatram: ’அமைதியாக இருந்து அதிரடி காட்டுவார்கள்!’ அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

May 04, 2024 05:12 PM

மீனத்தில் சித்து வேலை செய்யும் செவ்வாய்.. தலைகீழாக புரட்டி அடிப்பது உறுதி.. இந்த ராசிகள் ரொம்ப கவனமா இருக்கணும்

May 04, 2024 05:08 PM

சொகுசை தரப்போகும் சுக்கிரன்.. ஆடம்பரமாக வாழப்போகின்ற ராசிகள்.. அதிர்ஷ்ட பணமழை இவர்களுக்குத்தான்

May 04, 2024 03:36 PM

மீன ராசிக்கு புயலாய் கொட்டும் புதன்.. பண குவியலில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

May 04, 2024 03:28 PM

குரு குதூகலிக்க போகிறார்.. கிருத்திகை நட்சத்திரத்தில் அதிரடி.. வாழையடி வாழையாய் வாழப் போகும் ராசிகள்..!

May 04, 2024 12:44 PM

விளக்கு ஏற்றும் முறைகள்

பித்தளை, வெள்ளி இது போன்ற விளக்குகளைக் கழுவி சுத்தமாகத் துடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்குகளைச் சுத்தமாகத் துடைத்து மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகிவிடும் பொட்டு வைக்க வேண்டும்.

குத்துவிளக்குகளை வாசனை உள்ள மலர்கள் கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும். அவ்வாறு குத்து விளக்குகளின் அடிப் பக்கத்தில் பூ சூட்டும் பொழுது நமது பெற்றோருக்காகவும், மற்ற உறவுகளுக்காகவும் வேண்டிக் கொண்டு பூக்களைச் சூட வேண்டும்.

விளக்கின் நடுப்பகுதியில் பூச்சூட்டும் போது திருமணம் செய்து கொண்டவர்களின் வீட்டாரையும் குழந்தைகளையும் எண்ணி பிரார்த்தனை செய்து பூக்களைச் சூட வேண்டும்.

குத்துவிளக்கின் உச்சிப் பகுதியில் பூச்சூடும் பொழுது மகாலட்சுமியைப் பரிபூரணமாகப் பிரார்த்தனை செய்து அதனைச் சூட வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்யும் பட்சத்தில் இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது அதிகமாகும்.

பொதுவாக விளக்குகளை வெறும் தரையில் வைக்கக் கூடாது. பித்தளை, வெள்ளி, செம்பு போன்ற உலகங்கள் கொண்ட தாம்பூலத்தின் மீது வைத்து விளக்கேற்ற வேண்டும். மரத்திலால் ஆன பொருட்களின் மீது விளக்கை வைக்கும் போது அடிப்பாகத்தில் இது போன்ற உலோகப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.

குத்துவிளக்கு பகுதிகளில் மொத்தமாக எட்டு இடங்களில் பொட்டு வைக்க வேண்டும். அதற்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்ற பொருட்களைப் பயன்படுத்திக் கொண்டு வைக்க வேண்டும்.

இவ்வாறு குத்து விளக்கில் வைக்கப்படும் எட்டு பொட்டுக்களும் இறைவனின் உருவத்தை அலங்கரிப்பதாக ஆன்மீகம் கூறுகிறது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் இறைவனின் பூரண அருள் கிடைக்கும் என்பதை அதிகமாகும்.