தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Marriage Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் வாழ்கைத் துணை பற்றி சொல்லும் 7ஆம் இட ரகசியங்கள் இதோ!

Marriage horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் வாழ்கைத் துணை பற்றி சொல்லும் 7ஆம் இட ரகசியங்கள் இதோ!

Kathiravan V HT Tamil

Sep 10, 2024, 05:32 PM IST

google News
Marriage horoscope: ராகு, கேதுவை தவிர்த்த அனைத்து கிரகங்களுக்கும் 7ஆம் பார்வை உள்ளதால் 7ஆம் இடத்தில் அமரும் கிரகங்கள் உங்கள் லக்னத்தை கட்டுப்படுத்தும் என்பதால் 7ஆம் இடத்தில் கிரகங்கள் இல்லாமல் இருப்பது வெகு சிறப்புகளை தரும்.
Marriage horoscope: ராகு, கேதுவை தவிர்த்த அனைத்து கிரகங்களுக்கும் 7ஆம் பார்வை உள்ளதால் 7ஆம் இடத்தில் அமரும் கிரகங்கள் உங்கள் லக்னத்தை கட்டுப்படுத்தும் என்பதால் 7ஆம் இடத்தில் கிரகங்கள் இல்லாமல் இருப்பது வெகு சிறப்புகளை தரும்.

Marriage horoscope: ராகு, கேதுவை தவிர்த்த அனைத்து கிரகங்களுக்கும் 7ஆம் பார்வை உள்ளதால் 7ஆம் இடத்தில் அமரும் கிரகங்கள் உங்கள் லக்னத்தை கட்டுப்படுத்தும் என்பதால் 7ஆம் இடத்தில் கிரகங்கள் இல்லாமல் இருப்பது வெகு சிறப்புகளை தரும்.

ஒரு ஜாதகத்திற்கு வாழ்கைத் துணையை கொடுக்க கூடிய ஸ்தானமாக 7ஆம் இடம் உள்ளது. 7ஆம் இடத்தை தன்மைகளை கொண்டே ஒருவரின் வாழ்கை துணை எப்படி இருப்பார் என்பதை நாம் பார்க்கலாம். 

சமீபத்திய புகைப்படம்

குரு.. வளமான வாழ்க்கை வாழப் போகும் ராசிகள்.. தொட்டால் தங்கம் மலரும்.. பண யோகம்.. தன யோகம்!

Nov 27, 2024 07:00 AM

'படிப்பினைகள் பாடம் தரும்.. காலம் அழகாகும்.. வாழ்க்கை வளம் பெரும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 27, 2024 05:00 AM

மேஷம் முதல் மீனம் வரை.. யாருக்கு சூப்பரான நாள்? நவம்பர் 27ம் தேதி 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Nov 26, 2024 09:16 PM

சனி ராகு முடிவெடுத்துவிட்டனர்.. இந்த ராசிகள் நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. இனி பண மழையா கொட்டுமாம்.. ஆனந்த கண்ணீர் தானாம்..!

Nov 26, 2024 05:15 PM

குரு.. அடடே இந்த ராசிகளா.. இனி பணமழை கொட்டுமாமே.. உச்ச ராசிகள் அணிவகுப்பு.. மகிழ்ச்சி ஊஞ்சலில் ஆடுவது உறுதி!

Nov 26, 2024 05:01 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..நாளை நவ.27 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Nov 26, 2024 03:41 PM

வாழ்கைத் துணை மட்டுமின்றி, ஒரு மனிதனின் பாதி வாழ்கையை குறிக்கும் இடமாகவும் 7ஆம் இடம் உள்ளது. சமுதாயத் தொடர்பு, 10ஆம் இடத்திற்கு 10ஆம் இடம், கூட்டாளிகள் உடனான தொடர்பு, காதலில் வெற்றி, காமத்தின் நிலை, வாழ்கைத் துணையின் தகுதி, சட்டரீதியான ஒப்பந்தங்கள், கூட்டளிகளின் தன்மை, ஆயுளின் தன்மைகள், தாயாரின் சொத்துக்கள், தகப்பன் வழி உறவுகள், வாழ்கைத் துணையின் குணம் மற்றும் ஒழுக்கம், காமத்தின் தன்மை ஆகியவற்றை குறிக்கும் இடமாக 7ஆம் இடம் உள்ளது. 

ராகு, கேதுவை தவிர்த்த அனைத்து கிரகங்களுக்கும் 7ஆம் பார்வை உள்ளதால் 7ஆம் இடத்தில் அமரும் கிரகங்கள் உங்கள் லக்னத்தை கட்டுப்படுத்தும் என்பதால் 7ஆம் இடத்தில் கிரகங்கள் இல்லாமல் இருப்பது வெகு சிறப்புகளை தரும். மனிதரின் ஆயுளை குறைக்க கூடிய பொது மாரக ஸ்தானம் ஆகவும் 7ஆம் இடம் விளங்குகின்றது. 

நல்ல வாழ்கைத் துணை, நல்ல கூட்டாளி, நல்ல சமுதாயத் தொடர்புகள் அமைவதன் மூலமே ஒரு மனிதனின் வெற்றி, தோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றது. இது அனைத்தையும் சொல்லும் இடமாக 7ஆம் இடம் உள்ளது. 

சூரியன் 

லக்னத்திற்கு 7ஆம் இடத்தில் சூரியன் இருந்தால், லக்னம் வலுவாக இருப்பது அவசியம், அப்படி இல்லை எனில் ஆட்டிப்படைக்கும் வாழ்கை துணை உண்டாகும். கூட்டளிகளால் அடிமைபடுத்தும் நிலை ஏற்படலாம். 

சந்திரன் 

சந்திரன் 7ஆம் இடத்தில் அமர்வது சிறப்புகளை தரும். அழகான குணம் நிறைந்த வாழ்கைத் துணை அமைவார். பயணங்களில் ஈடுபாடு இருக்கும். சீரான முன்னேற்றம் உண்டாகும். வெளிநாடுகளுக்கு சென்று வாழும் சூழல் உண்டாகும். ஒப்பந்தங்கள் மூலம் வெற்றி கிடைக்கும். 

செவ்வாய் 

செவ்வாய் 7ஆம் வீட்டில் இருந்தால் குணக்கேடுகளை உருவாகும் வாழ்கை துணையை தரும். கோபம் கொண்ட வாழ்கைத் துணை மற்றும் கூட்டாளிகள் கிடைப்பார்கள். லக்னாதிபதிக்கு சுபர்கள் தொடர்பு இருந்தால் மட்டுமே திருமணம், கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். 

புதன் 

புதன் 7ஆம் இடத்தில் இருந்தால் புத்திசாலியான வாழ்கைத் துணை அமையும். எழுத்துத்துறையில் ஆர்வம் இருக்கும். புரிந்து கொள்ளக்கூடிய வாழ்கைத் துணை கிடைப்பார்கள். சமுகத்துடன் இணக்கமான சூழல் உண்டாகும். 

குரு 

குரு பகவான் 7ஆம் இடத்தில் இருப்பது சிறப்புகளை தரும். புரிந்து கொள்ளும் தன்மை, பெரிய மனித தன்மை, நல்ல கூட்டாளிகள், பெரிய மனிதர்கள் ஆதரவு, முன்னேற்றப் பாதைக்கு செல்வது, ஒழுக்க சீலர்களாக இருப்பது உள்ளிட்ட பண்புகள் ஜாதகருக்கு இருக்கும். இவர்களுக்கு அமையும் வாழ்கைத் துணை புரிந்து கொள்ளக்கூடிய வாழ்கைத் துணையாக இருப்பார்.

சுக்கிரன் 

சுக்கிரன் 7ஆம் இடத்தில் இருப்பது அதிக காதல் வயப்படும் நிலை, அழகியல் கொண்ட வாழ்கைத் துணை அமைவது, காம சிந்தனைகள் அதிகம் இருப்பது, இளமையில் திருமணம் ஏற்படுவது, எதிர்பாலினரிடம் ஈர்ப்பு இருந்து கொண்டே இருத்தல், சொத்து, சுகம் உடன் கூடிய வாழ்கை துணை அமைவது போன்றவை ஏற்படும். 

சனி, ராகு, கேது

சனி, ராகு, கேது ஆகிய மூன்று கிரகங்களும் 7ஆம் இடத்தில் அசூர வலுவைப்பெறுவார்கள் என்பதால் திருமண தாமதம் உண்டாகும். சிலருக்கு திருமணமே நடைபெறாத சூழல், திருமண வாழ்கையில் சிரமம் உள்ளிட்ட நிலை உண்டாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அடுத்த செய்தி