Parvathy: என் கழுத்தில் காம விளையாட்டை ஆரம்பித்த இயக்குநர் - நடிகை ஸ்ரீலேகா; ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி பேசிய பார்வதி
Parvathy: என் கழுத்தில் காம விளையாட்டை ஆரம்பித்த இயக்குநர் என நடிகை ஸ்ரீலேகா; ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி பேசிய பார்வதி திருவோத்து பற்றியும் செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Parvathy: மலையாளத் திரையுலகில் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சுரண்டல் குறித்து பல தகவல்களை சொன்ன ஹேமா கமிட்டி அறிக்கையை "வரலாற்று தருணம்" என்று நடிகை பார்வதி திருவோத்து கூறுகிறார். அதேபோல், நடிகை ஸ்ரீலேகா மித்ராவும் தனக்கு நடந்த துன்பத்தைக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஏ.எஃப்.பி செய்திமுகமையிடம் பேசிய நடிகை திருவோத்து, ஹேமா கமிட்டி பற்றி அறிக்கைக்குப்பின் நடிகர்கள் செய்த பாலியல் தொல்லைகள் குறித்து நடிகைகள் பேசிவருவது, மீ டூவை விட இரண்டு மடங்கு அதிகம் என விவரித்தார்.
இந்த ஹேமா கமிட்டியை முன்னின்று நடத்திய வுமன் இன் சினிமா கலெக்டிவ் (டபிள்யூ.சி.சி) பரப்புரைக் குழுவின் உறுப்பினரான பார்வதி திருவோத்து, "தொழில்துறையில் பணிபுரியும் பெண்கள் தங்களை வேலைக்கு அமர்த்தும் ஆண்களால் ஒரு வாய்ப்பைப் பெற்றதற்காக, அவரது பாலில் தொல்லைகளை எல்லாம் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்ற நிலை இருந்தது.
பெண்களைத் தோல்வியடையச்செய்யும் கட்டமைப்பு: நடிகை பார்வதி திருவோத்து:
இது இனி தனிநபருக்கு இடையிலான புகார் அல்ல. இது பெண்களைத் தொடர்ந்து தோல்வியடையச் செய்யும் ஒரு அமைப்புரீதியான கட்டமைப்பைப் பற்றியது. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து, பல முன்னணி நடிகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது எல்லாவற்றையும் உலுக்குகிறது.
நீ ஒரு திறமையான நடிகை. உங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தால் வேறு வேலை தேடுங்கள் என்று யார் சொன்னாலும் கேட்காதீர்கள்.
இது உங்கள் தொழில், இது மற்றவர்களின் தொழில். பேசுங்கள், அதனால் நடிகைகளுக்கு உரிமையுள்ள இடத்தை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்’’ என்று நடிகை பார்வதி திருவோத்து பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிய திரையுலகப் பெண்களுக்கு ஒரு செய்தியை வழங்கினார்.
இந்திய சினிமாவில் அவதூறு குற்றச்சாட்டுகள் புதிதல்ல. அவமானப்படுத்தப்பட்ட அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீனுக்கு எதிராக ஹாலிவுட்டில் 2017ஆம் ஆண்டு, மீ டூ இயக்கம் வெடித்த சில மாதங்களிலேயே, இந்தியாவில் 2018ஆம் ஆண்டில் ஒரு அலையைக் கண்டது. ஆனால், பார்வதி சமீபத்திய குற்றச்சாட்டுகளை "மீ டூ பார்ட் டூ" என்று கூறுகிறார்.
தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலை வெளிப்படையாகப்பேசிய ஸ்ரீலேகா மித்ரா:
விருதுபெற்ற மூத்த மலையாள இயக்குநர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறிய நடிகை ஸ்ரீலேகா மித்ரா, தனது பாதுகாப்பிற்காக பயந்து, தனது ஹோட்டல் கதவுக்கு எதிராக நாற்காலிகள் மற்றும் சோபாவை தள்ளியதை நினைவு கூர்ந்தார். கேன்ஸ் திரைப்பட விழாவில் விருதுகளை வென்ற அவர் இதை 15 ஆண்டுகள் கழித்து ஹேமா கமிட்டி அறிக்கைக்குப் பின் வெளியில் சொல்லியிருக்கிறார்.
இயக்குநரின் வீட்டில் நடந்த ஒரு கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட நடிகை ஸ்ரீலேகா மித்ரா அன்று நடந்தவற்றை விவரித்தார்.
இதுதொடர்பாக ஏஎஃப்பி செய்தி முகமையிடம் ஸ்ரீலேகா மித்ரா கூறியதாவது, ‘’ அன்று இரவு முழுவதும் நான் விழித்திருந்தேன். அவர் என் தலைமுடி மற்றும் கழுத்தில் காம விளையாட்டை ஆரம்பித்தார். அப்போது நான் எதுவும் சொல்லவில்லை என்றால், அவரது கை என் உடலின் மற்ற பகுதிகளைப் பிடித்திருக்கும் என்று எனக்குத் தெரியும்" என்று 2009ஆம் ஆண்டில் நடந்த சம்பவங்களை விவரித்தார்.
மேலும், அவர், ‘’அங்கிருந்து கிளம்பி ஹோட்டலுக்குத் திரும்பினேன். அவரது நகர்வுகளுக்குப் பின்னால் உள்ள நோக்கங்கள் எனக்கு மிகவும் தெளிவாக இருந்தன. நான் பயந்து போனேன்"என்றார்.
ஸ்ரீலேகாவின் பாலியல் புகாரில் சிக்கியிருந்த கேரள திரைப்பட அகாடமி தலைவர் ரஞ்சித் பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அறிக்கை வெளியிடப்படும் வரை இந்த சம்பவத்தை ஒரு தொழில்துறை சகாவிடம் சொல்லியிருந்த ஸ்ரீலேகா, ரஞ்சித் "தனது அதிகாரத்தை" தவறாகப் பயன்படுத்தியதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அதன்பின், ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமான பெண்ணின் மானத்தை சீர்குலைத்ததாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஹேமா அறிக்கை:
ஆகஸ்ட் 19அன்று வெளியிடப்பட்ட நீதிபதி கே.ஹேமா கமிட்டி அறிக்கை, பெண் நடிகர்கள் பாலியல் துன்புறுத்தல் என்ற "மோசமான தீமையை" எதிர்கொள்கின்றனர் என்று கூறியது. பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார் அளித்ததை அடுத்து, அமைக்கப்பட்ட முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு இதனை உறுதிசெய்தது.
இந்த அறிக்கையின்படி, பாலியல் வன்கொடுமை குறித்து பேச நினைக்கும் பெண்கள், தங்கள் உயிருக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதால் மௌனமாக்கப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கை கூறியது.