தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Magaram Money Luck: ’மகரம் ராசிக்காரர்கள் கோடிகளை குவிப்பது எப்போது?’ 2, 6, 10, 11ஆம் இடங்கள் சொல்லும் ரகசியம்!

Magaram Money Luck: ’மகரம் ராசிக்காரர்கள் கோடிகளை குவிப்பது எப்போது?’ 2, 6, 10, 11ஆம் இடங்கள் சொல்லும் ரகசியம்!

Kathiravan V HT Tamil

Aug 14, 2024, 07:01 AM IST

google News
மகரம் ராசிக்காரர்கலுக்கு 2, 6, 10, 11ஆம் இடங்களாக கும்பம், மிதுனம், துலாம் மற்றும் விருச்சிகம் ஆகியவை உள்ளது. இதில் கும்பம், மிதுனம், துலாம் ஆகிய ராசிகள் வாயு தத்துவத்தை அடிப்படையாக கொண்டது.
மகரம் ராசிக்காரர்கலுக்கு 2, 6, 10, 11ஆம் இடங்களாக கும்பம், மிதுனம், துலாம் மற்றும் விருச்சிகம் ஆகியவை உள்ளது. இதில் கும்பம், மிதுனம், துலாம் ஆகிய ராசிகள் வாயு தத்துவத்தை அடிப்படையாக கொண்டது.

மகரம் ராசிக்காரர்கலுக்கு 2, 6, 10, 11ஆம் இடங்களாக கும்பம், மிதுனம், துலாம் மற்றும் விருச்சிகம் ஆகியவை உள்ளது. இதில் கும்பம், மிதுனம், துலாம் ஆகிய ராசிகள் வாயு தத்துவத்தை அடிப்படையாக கொண்டது.

மகர லக்னத்திற்கு தனம் வரும் வழிகளுக்கான சூழ்ச்சுங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.ராசி மண்டலத்தின் 10ஆவது ராசியான மகரம், சனி பகவானின் ஆட்சி வீடாகும். இங்கே செவ்வாய் பகவான் உச்சமும், குரு பகவான் நீசமும் அடைகின்றனர். சுக்கிரன், புதன், ராகு, கேது ஆகிய கிரகங்கள் நட்பு பெறுவார்கள். சூரியனும், சந்திரனும் இங்கே பகை பெறுவார்கள். 

சமீபத்திய புகைப்படம்

மகரத்தில் நுழையும் சுக்கிரன்! திருமண யோகம் கைக்கூடும் 6 ராசிகள்! இனி மஜாதான்!

Nov 28, 2024 07:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..நாளை நவ.29 உங்களுக்கு எப்படி இருக்கும்? - ராசிபலன்கள் இதோ!

Nov 28, 2024 04:23 PM

வெறிபிடித்து வரும் செவ்வாய்.. அள்ளி அள்ளி சுவைக்கும் ராசிகள்.. இனி பொட்டி பொட்டியாக வரும்!

Nov 28, 2024 04:06 PM

உதயத்தில் போட்டு சாத்த போகும் புதன்.. பணத்தில் பிச்சுகிட்டு பறக்க போகும் ராசிகள்.. இனி உச்சகட்ட சந்தோஷம் வரும்

Nov 28, 2024 04:02 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே..யாருக்கு லாபமான நாள்?..நாளை நவ.28 ராசிபலன்கள் இதோ..!

Nov 28, 2024 04:00 PM

சனி தாண்டவம்.. இனி தொட்டுப் பார்க்க முடியாத ராசிகள்.. முடிஞ்சா டச் பண்ணி பாருங்க தெரியும்!

Nov 28, 2024 12:45 PM

இவர்களுக்கு 2, 6, 10, 11ஆம் இடங்களாக கும்பம், மிதுனம், துலாம் மற்றும் விருச்சிகம் ஆகியவை உள்ளது. இதில் கும்பம், மிதுனம், துலாம் ஆகிய ராசிகள் வாயு தத்துவத்தை அடிப்படையாக கொண்டது. 

மகரம் ராசிக்கு பணம் வரும் சூழ்ச்சுமங்கள் இதில் ஒளிந்து உள்ளது. கும்பம் ராசிக்கு சனி பகவான், மிதுனம் ராசிக்கு புதன், துலாம் ராசிக்கு சுக்கிரன் ஆகிய மூன்று பேருமே அதிநட்பு கிரகங்களாக உள்ளனர். லாபாதிபதியாக வரும் செவ்வாய் பகவான் மகரத்தில் உச்சம் பெறுகிறார். சுகத்தையும், பாதகத்தையும் சேர்த்தே தரக்கூடியவர் ஆவார். 

இரண்டாம் இடமான கும்பம்!

2ஆம் இடமான சனி பகவான் வீட்டில் செவ்வாய் பகவானின் அவிட்டம் 3, 4 பாதங்கள், ராகு பகவானின் சதயம் நட்சத்திரத்தின் 4 பாதங்களும், குரு பகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தின் 3 பாதங்களும் அடங்கி இருக்கும். 

இதில் செவ்வாய்- சனி இணைப்பு வரும் போது கனரக வாகனங்கள், பொறியியல் அறிவு, எலெக்ட்ரானிக் துறை, மெக்கானிக்கல் துறை உள்ளிட்ட வகைகளில் பொருள் சேர்க்கை ஏற்படும். உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள், வாகனங்களை இயக்குவது, பராமரிப்பது, ரயில்வே துறை, ஜோதிடம், ஆன்மீகம், உளவுத்துறை, ரகசிய காப்பாளர்கள், பணத்தை கொண்டு செய்யப்படும் நகை அடகு வியாபாரம், கட்டுமானம் மற்றும் அது சார்ந்த தொழில்கள், ரியல் எஸ்டேட், இண்டீரியர் டெக்கரேஷன், வெளிநாட்டு தொடர்பு ஆகிய வகைகள் மூலம் செல்வம் சேர்க்க வாய்ப்புகள் உண்டாகும். 

6ஆம் வீடான மிதுனம் 

6ஆம் வீடாக வரும் புதன் வீடான மிதுனம் ராசியில் செவ்வாயின் மிருகசிரீடம், ராகுவின் திருவாதிரை, குருவின் புனர்பூசம் நட்சத்திரங்கள் உள்ளன. இதில் ஒப்பந்தம் சார்ந்த தொழில்கள், பத்திரப்பதிவு, தரகு வேலைப்பாடுகள், தபால் துறை, போக்குவரத்து துறை, எழுத்து, கதை, காவியங்களை படைப்பது, கமிஷன் ஏஜெண்ட், பயணம் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்கள், ஆசிரியர், கல்வி சார்ந்த தொழில்கள், பதிப்பகம் நடத்துவது, மேலாண்மை பணிகள், நிதி நிர்வாகம் சார்ந்த பணிகள் மூலம் செல்வம் சேர்க்கும் நிலை ஏற்படும். 

10 ஆம் வீடான துலாம் 

கலைத்துறை, அழகு சார்ந்த பொருட்கள், வசதியாக வாழ தேவைப்படும் பொருட்கள் உற்பத்தி, கப்பல் கட்டுதல், இலக்கிய துறை, புகைப்பட துறை, நாட்டியம், கட்டுமானம் ஆகிய துறைகள் மூலம் செல்வம் சேர்க்கும் நிலை ஏற்படும்.  

மகரத்தின் அடிப்படை விதி

கடினமாக உழைத்து முன்னேற வேண்டும் என்பது மகரம் ராசியின் அடிப்படை விதியாக உள்ளது. யாருடைய உதவியும் கிடைக்கப்பெறாமலேயே வாழ்வியலில் போராட வேண்டும். வாழ்கைதுணை என்ற ஒரு ஸ்தானம் மட்டுமே இவர்களுக்கு சிறப்பாக அமையப்பெறும். பாராட்டை எதிர்பார்க்காமல், திட்டமிடாமல் செயல்படுவதன் மூலம் நன்மைகள் கிடைக்கும். வயோதிக காலத்தில் வசதி வாய்ப்புகள் கிடைக்கும். 35வயது வரை போராட்டங்களை சந்தித்தாலும், அதன் பிறகு நன்மைகள் கிடைக்கும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி