’மகரம் ராசி, அவிட்டம் நட்சத்திரத்திற்கு கோடீஸ்வர யோகம் எப்போது?’ ஏற்றி விட போகும் குரு, சனி, புதன்!

By Kathiravan V
Aug 12, 2024

Hindustan Times
Tamil

மகரம் ராசிக்கு அதிபதியாக சனி பகவான் உள்ளார். மகரம் ராசிக்காரர்களை சனி பகவான் கெடுக்கமாட்டார். ஏழரை சனி காலத்தில் கூட ஆட்டிப்பார்பாரே தவிர கெடுக்கமாட்டார். 

மகரம் ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரத்திற்கு செவ்வாய் பகவான் அதிபதியாக உள்ளார். 4 மற்றும் 11ஆம் வீட்டுக்கு உடையவராக செவ்வாய் பகவான் உள்ளார். வீடு, மனை, வாகனம் ஆகிய செல்வங்களின் அதிபதியாகவும் செவ்வாய் பகவான் உள்ளார். 

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதலில் செவ்வாய் திசையும், அதன் பின்னர் 18 ஆண்டுகளுக்கு ராகு திசையும் இருக்கும். இந்த இளமை காலத்தில் கஷ்டப்பட்டாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள கூடிய உடல் வலிமை இருக்கும். 

அதற்கு பிறகு குரு, சனி, புதன் ஆகிய தசைகள் வருகின்றது. மகரம் ராசிக்கு 35 முதல் 60 வயது வரை உள்ள சனி தசையும், அதற்கு பின்னர் வரும் புதன் தசையும் மிகப்பெரிய வளர்ச்சியை தரக்கூடும். 

குரு திசையை பொறுத்தவரை, நமது ஜாதகத்தில் குரு பகவான் பலம் பெற்று இருக்க வேண்டும். குரு மீது மரியாதை கொள்ளுதல் மிகப்பெரிய ஏற்றத்தை கொண்டு வரும். 

யானை என்பது குருவின் அம்சம் ஆகும். யானையின் ஆசிர்வாதத்தை வாங்கி வேண்டும். வெள்ளி ஆபரணங்களை மகரம் ராசிக்காரர்கள் அணிந்து கொள்வது ஏற்றத்தை கொடுக்கும். 

 சனி பகவானுக்கு தனி சந்நிதிகள் உள்ள கோயிலுக்கு ஆண்டு தோறும் செல்லும் மகரம் ராசிக்காரர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகும்.

உங்கள் எடை குறைப்பு பயணத்திற்கு உருளைக்கிழங்கு நல்லதா அல்லது கெட்டதா?