தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  2025 புத்தாண்டு துலாம் ராசி பலன்கள்: தலைகீழாக மாறிவிடுமா.. தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

2025 புத்தாண்டு துலாம் ராசி பலன்கள்: தலைகீழாக மாறிவிடுமா.. தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

Dec 10, 2024, 04:58 PM IST

google News
New year 2025: புத்தாண்டு 2025 ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றனர். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு துலாம் ராசி பெறக்கூடிய பலன்கள் குறித்து இங்கு காண்போம்.
New year 2025: புத்தாண்டு 2025 ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றனர். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு துலாம் ராசி பெறக்கூடிய பலன்கள் குறித்து இங்கு காண்போம்.

New year 2025: புத்தாண்டு 2025 ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றனர். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு துலாம் ராசி பெறக்கூடிய பலன்கள் குறித்து இங்கு காண்போம்.

New year 2025: புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் இன்பம் தான். பலரும் பல ஆண்டுகள் கடந்து சென்றாலும் புத்தாண்டு எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். இந்த ஆண்டும் நமக்கு சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணக்கூடியவர்கள் சிலர்.

சமீபத்திய புகைப்படம்

மாடி வீடு கட்டிக்கொடுக்கும் சனி.. 2025ஆம் ஆண்டு பணத்தை வாரிக் கொள்ளும் 3 ராசிகள்.. ஜாலி ஆட்டம்

Dec 18, 2024 05:58 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.19 உங்கள் கையில் அதிகம் பணம் சேருமா? - ராசிபலன் இதோ

Dec 18, 2024 03:09 PM

குரு சும்மா விடமாட்டார்.. இந்த 3 ராசிகள் கதி என்ன?.. வந்து பாருங்க அதிர்ஷ்டமா?.. கஷ்டமா?

Dec 18, 2024 02:56 PM

சனி 2025 சரமாரியாக அடிப்பார்.. நேரடி பயணத்தில் சிக்கிய ராசிகள்.. தாறுமாறாக அதிர்ஷ்டம் வரும்

Dec 18, 2024 02:49 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.19 எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும்? - ராசிபலன்!

Dec 18, 2024 02:45 PM

மேஷம் முதல் கன்னி வரை.. உங்க ராசிப்படி 2025 ஆம் ஆண்டில் எந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தெரியுமா?

Dec 18, 2024 12:52 PM

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் பலன்கள் அமையும் என கூறப்படுகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுகின்றனர். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சில ராசிகளுக்கு நன்மைகள் மற்றும் சில ராசிகளுக்கு தீமைகள் என அனைத்தும் கலவையான பலன்களாக கிடைக்கக்கூடும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றனர். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு துலாம் ராசி பெறக்கூடிய பலன்கள் குறித்து இங்கு காண்போம்.

நிதி நிலைமை

இந்த 2025 புத்தாண்டு உங்களுக்கு நிதி நிலைமை சிறப்பாக இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. வீட்டை பராமரிப்பதற்கான செலவுகள் ஏற்படக்கூடும். புதிதாக தங்க நகை வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நகை வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். நல்ல லாபத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நிதி நிலைமையை முன்னேற்றம் செய்து கொடுக்கும். உணவு தொடர்பான தொழிலில் உங்களுக்கு பராமரிப்பு செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு நிவர்த்தி கிடைக்கும். அதனால் உங்களுக்கு சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவருக்கு முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.

கல்வி

மாணவர்களுக்கு இந்த 2025 புத்தாண்டு மிகவும் சிறப்பான ஆண்டாக இருக்கக்கூடும். படித்து முடித்தவுடன் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர்நிலைப் பள்ளியில் படிப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் விருது பெற்று வெற்றி காண்பார்கள். 

அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வுகளில் வெற்றி காண்பார்கள். நுழைவுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அரசு பணியை இலக்காக கொண்டு தேர்வு எழுதுபவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு கிடைக்கக்கூடும். வெளிநாடு சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

உடல் ஆரோக்கியம்

இந்த 2025 புத்தாண்டு உங்களுக்கு நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காய்ச்சல் மற்றும் தலைவலி உங்களுக்கு அவ்வப்போது ஏற்பட்டு சிக்கல்கள் கொடுக்க வாய்ப்பு உள்ளது. ஜனவரி மாதத்தில் இருந்து உங்களுக்கு தலைவலி சிக்கல்கள் ஏற்படக்கூடும். ஆனால் விரைவில் உங்களுக்கு குணமாகிறது. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதில் மிகவும் முக்கிய கவனத்தோடு இருக்க வேண்டும். தியானம் மற்றும் சுவாசப் பயிற்சிகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். 

மார்ச் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது உங்களுக்கு நல்லது. அதிகம் தண்ணீர் குடித்தால் உங்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். செரிமான சிக்கல்கள் ஏற்பட்டால் விரைவில் குணமடைந்து விடும் வெளியே சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது உடற்பயிற்சி மிகவும் அவசியமாகும். அதுவே உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.

பரிகாரங்கள்

மகாலட்சுமி கோவிலுக்கு சென்று வெள்ளிக்கிழமை திருநாளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். காமதேனு சிலைக்கு பூஜைகள் செய்து வழிபட்டால் உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கக்கூடும். புதன்கிழமைகளில் அன்று மகாவிஷ்ணுவுக்கு சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட்டால் உங்களுக்கு ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

அடுத்த செய்தி