ராகு கிரக பெயர்ச்சி.. 2025 உங்கள் ஆண்டு.. இந்த ராசிகள் கடன் சிக்கல் தீரும்.. பணம் கொட்டும்.. வாழ்க்கை மாறும்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ராகு கிரக பெயர்ச்சி.. 2025 உங்கள் ஆண்டு.. இந்த ராசிகள் கடன் சிக்கல் தீரும்.. பணம் கொட்டும்.. வாழ்க்கை மாறும்!

ராகு கிரக பெயர்ச்சி.. 2025 உங்கள் ஆண்டு.. இந்த ராசிகள் கடன் சிக்கல் தீரும்.. பணம் கொட்டும்.. வாழ்க்கை மாறும்!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 07, 2024 02:44 PM IST

Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ராகு கிரக பெயர்ச்சி.. 2025 உங்கள் ஆண்டு.. இந்த ராசிகள் கடன் சிக்கல் தீரும்.. பணம் கொட்டும்.. வாழ்க்கை மாறும்!
ராகு கிரக பெயர்ச்சி.. 2025 உங்கள் ஆண்டு.. இந்த ராசிகள் கடன் சிக்கல் தீரும்.. பணம் கொட்டும்.. வாழ்க்கை மாறும்!

ராகு பகவான் மற்றும் கேது பகவான் இவர்கள் இருவரும் இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய செயல்பாடு வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் ஒரே மாதிரி இருக்கும். அந்த வகையில் ராகு பகவான் அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

இந்நிலையில் ராகு பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு கும்ப ராசிக்கு செல்கிறார் இது சனி பகவானின் சொந்தமான ராசி ஆகும். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் ராகு பகவான் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நிதி நன்மைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மன அழுத்தம் உங்களுக்கு குறையக்கூடும்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். 

பலமுறை கடின உழைப்பை கொடுக்கும். பொழுது உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் நல்லது. செய்வதன் மூலம் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

தனுசு ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப்போகின்றார். அதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நல்ல மாற்றங்கள் கிடைக்க கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி சிக்கலில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். கடன் தொல்லைகளிலிருந்து உங்களுக்கு நிவர்த்தி கிடைக்கும். 

குடும்பத்தில் இருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். முக்கியமான முடிவுகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner