துலாம் ராசி புத்தாண்டு 2025 பலன்கள்: தொடக்கத்திலேயே அடி.. பாத்துக்கலாம் வாங்க.. என்ன நடக்கும்?
Dec 10, 2024, 04:53 PM IST
New Year 2025:
New Year 2025: புதிதாக பிறந்திருக்கக் கூடிய 2025 ஆம் ஆண்டு 12 ராசிக்காரர்களுக்கும் கலவையான பலன்கள் கிடைக்க கூடும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இந்த புத்தாண்டில் பெரிய கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுகிறார்கள். தற்போது துலாம் ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெறுவார்களா இல்லையா என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
சமீபத்திய புகைப்படம்
துலாம் ராசி பொது பலன்கள்
இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். இந்த 2025 ஆம் ஆண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். விவசாய சிக்கல்களுக்கு உதவி கிடைக்க கூடும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். தொழிலில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
நண்பர்களால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள்.
வேலை மற்றும் தொழில்
இந்த 2025 புத்தாண்டு உங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. தொழில் நிறுவனங்களில் பணியாற்றக் கூடியவர்கள் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தனியார் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கக்கூடும். அதிக வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பிப்ரவரி மாதம் உங்களுக்கு உயர் அலுவலர்களிடம் பாராட்டுக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சம்பள உயர்வுக்கான சூழ்நிலைகள் அமையும். தகவல் தொழில்நுட்ப துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மார்ச் மாதம் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அரசு பதவியில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும். அதிக லாபம் கிடைக்கக்கூடும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கக்கூடும். தொழிலை இழிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளிநாட்டு நிறுவனங்களோடு புதிய ஒப்பந்தங்கள் போடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது
காதல் மற்றும் திருமண வாழ்க்கை
காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை இந்த 2025 புத்தாண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கக்கூடும். காதல் உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கப்படும். வாழ்க்கை துணையோடு வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இனிமையான பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. காதலர்களுக்கு இடையே ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
தவறான புரிதல்களால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். தேவையற்ற உரையாடல்களை தவிர்ப்பது நல்லது. திருமண முயற்சிகள் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். காதல் வாழ்க்கை திருமணம் ஆக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களை கொடுத்து பரிமாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண தம்பதிகள் ஆன்மீகப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.